மீண்டும் ரீஎன்ட்ரியாக 'மக்கள் நாயகன்' ராமராஜன் நடிக்கும் ‘சாமானியன்’

மீண்டும் ரீஎன்ட்ரியாக மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்கும் 45வது படம் ‘சாமானியன்’
நடிகர் ராமராஜன் ஆரம்பத்தில் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராக ஹலோ யார் பேசறது , மண்ணுக்கேத்த பொண்ணு, மறக்க மாட்டேன் , மருதாணி உட்பட சில படங்களை இயக்கிய நிலையில் இயக்குனர் வேந்தன்பட்டி அழகப்பன் 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் .
அதனை தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன் ,ரயிலுக்கு நேரமாச்சு , நேரம் நல்லாயிருக்கு , கிராமத்து மின்னல் , ராசாவே உன்னை நம்பி, என்னை விட்டு போகாதே,கரகாட்டக்காரன் என தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்தவர்

2012ல் வெளியான மேதை படத்திற்கு பின்,,,,,,,,, மீண்டும் ரீஎன்ட்ரியாக மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்கும் படத்திற்கு ‘சாமானியன்’ என்ற தலைப்பில் டைட்டில் போஸ்டரை தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ராமராஜன் நடிக்கும் இந்த புதிய படத்தில் எம் எஸ் பாஸ்கர்,,, ராதாரவி,,, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சிம்பு ஹன்சிகா நடித்த மகா படத்தை தயாரித்த மதியழகன் இந்த படத்தை தனது 14வது படைப்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார்