top of page

'Ant-Man and the Wasp: Quantumania' - விமர்சனம் !



சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்ட் மேன் நாயகன் பால் ராட் கேப்டன் அமெரிக்காவுடன் சேர்ந்து உலகத்தை காப்பாற்ற போராடி கொண்டிருந்தாலும்,,,, தன் மகள் கேஸி செய்யும் அதீத ஆர்வக்கோளாறான செயல்களினால் ஆன்ட் மேன், வாஸ்ப் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் குவாண்டம் ரியலத்துக்குள் சிக்குகிறது.


குவாண்டம் ரியலத்துக்குள் காங்கை சிக்க வைத்து விட்டு ஜானட் தப்பித்த நிலையில், அந்த இடத்திலேயே மிகப்பெரிய ஒரு ராஜாங்கத்தை காங் உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார். ஆன்ட் மேன் மகள் கேஸி கொடுத்த சிக்னலை வைத்தே காங் ஆன்ட் மேன் குடும்பத்தை இந்த குவாண்டம் ரியலத்துக்குள் கொண்டு வருகிறார்.





அங்கே ஆன்ட் மேன் மகள் கேஸியை பணயமாக வைத்து ஆன்ட் மேன் மூலமாக தனக்கு சாதகமான விஷயங்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து வெளியேற முயற்சி செய்கிறார் காங்.


அனைத்து உலகங்களை அழிக்க காங்கின் கோரிக்கையை ஏற்ற ஆன்ட் மேன் அவருக்கு உதவியாக இருந்தாரா? காங்கிடம் இருந்து தன் மகளையும் உலகத்தையும் காப்பாற்ற போராடி வெற்றி பெற்றாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'Ant-Man and the Wasp: Quantumania'


படத்திற்கு பக்க பலமாக கிறிஸ்டோப் பெக் இசை!


குவாண்டம் ரியலத்துக்குள் நாயகன் பால் ராட் செல்லும் போது புதுமையாக பல ஆன்ட் மேன்கள் உருவாகும் காட்சியும் முடிவில் எறும்புகள் கூட்டமாக வந்து காங்கை அழிக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும் விதத்தில் எடுத்துள்ள இயக்குனர் பீட்டன் ரீட்டை பாராட்ட தோன்றுகிறது !!


ஆன்ட் மேனாக வரும் பால் ராட்,,,, கேஸியாக நடித்துள்ள கேத்ரின் நியூட்டன், வாஸ்ப் ஆக நடித்துள்ள - எவாஞ்சலின் லில்லி, ஜானட் கதாபாத்திரத்தில் நடிக்கும் மிச்செல்லி பிஃபர், காங்காக அசத்தலாக நடிக்கும் - ஜானதன் மேஜர்ஸ் என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

ரசிகர்களை கவரும் ஜனரஞ்சக படமாக - 'Ant-Man and the Wasp: Quantumania'



bottom of page