top of page

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிக்கும் 'வடக்குபட்டி ராமசாமி'


நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் இணைத் தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா. இப்படத்தை டிக்கிலோனா புகழ் கார்த்திக் யோகி இயக்குகிறார். இதில் மேகா ஆகாஷ் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் கவுண்டமணி சாரின் மிகப்பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ கூட கவுண்டமணி சாரின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான். 'வடக்குப்பட்டி ராமசாமி' ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம். மற்ற நடிகர்கள் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்: இசை: சீன் ரோல்டன், ஒளிப்பதிவு: 'விட்னெஸ்' படப்புகழ் தீபக், படத்தொகுப்பு: 'தீரன் அதிகாரம் ஒன்று', 'டெடி' படப்புகழ் சிவ நந்தீஸ்வரன், கலை இயக்குநர்: 'கோமாளி' படப்புகழ் ராஜேஷ், நடன இயக்குநர்: ஷெரிஃப். பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் கூறுகையில் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

bottom of page