top of page

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

இந்நிகழ்வில் திரு பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்..சங்க தலைவர் கவிதா..சங்கத்திற்கான அலுவலகம், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை பூச்சி முருகன் அவர்களிடம் வைத்தார்..நாற்காலி செய்தி கார்த்தி நன்றி உரை வழங்கினார்.. இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்க பட்டது..இந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் பேசும்போது... இங்கு வருகை தந்துள்ள நடிகர் புகழை, விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் என்று சொன்னார்கள். அந்தக் கோமாளி என்பதை இன்று முதல் நீக்கிவிடுவோம். ஏன்னா அவர் கோமாளியா வந்தவரு இன்னைக்கு போராளியா பெரிய லெவல்ல போயிட்டு இருக்காரு, ஒரு காமெடியன் மட்டும் தான் எல்லா வேடங்களையும் ஏற்று நடிக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை, ஒரு வில்லனுக்கு காமெடி எளிதில் வராது, அதேபோல் ஒரு கதாநாயகனுக்கும் காமெடி வருவது கடினம், இதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் பல வரலாறுகள் உள்ளன.


உதாரணமாக, நடிகர் நாகேஷ் அவர்களை கூறலாம். சண்டை காட்சி, காதல் காட்சி, அழுகை காட்சி என பல வேடங்களில் நடித்திருக்கிறார், அவர் நடித்த நீர்க்குமிழி படத்தில் இதை பார்க்கலாம், அதுபோன்று புகழும் வளர்ந்து வருவார்,


இதே மாதிரி இன்னொன்றை சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கெல்லாம் தெரிந்த "புகழ்" என்றால் ஒரே "புகழ்" சன் டிவியை உருவாக்கிய கலாநிதி மாறன் தான். டாக்டர் கலைஞர் அவர்கள் புகழ், புகழ், புகழ் என்று தான் எப்பொழுதும் பாசமாக அழைப்பார். இந்தப் புகழை பார்த்ததும் அந்த பெயர் தான் எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது. ஆகையால் இந்த புகழுக்கும் பெரிய வரவேற்பு நிச்சயமாக வருங்காலங்களில் இருக்கிறது. அதேபோல் தான் பிக் பாஸ் அபிராமியும்,


நான் ஒரு நடிகருடைய மகன்தான், எங்க அப்பா கலைமாமணி எஸ் எஸ் சிவசூரியன், 150 படங்களில் நடித்திருக்கிறார். அவரைப் பின்பற்றி நான் வந்திருக்கிறேன், பொதுவாக நான் சினிமாக்காரனாக வளர்ந்திருந்தாலும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அதிகம் செல்வதில்லை,
இந்த நிகழ்ச்சி ஒரு வரவேற்கத்தக்க நிகழ்ச்சி என்பதால் வந்திருக்கிறேன். நான் இதுவரை கதாநாயகியோடெல்லாம் பேசியதே இல்லை, நடிகர் சங்கத்திற்கு வந்தாலும் கூட எனது வேலையை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுவேன், ஆனால் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் சிஸ்டர் நடிகை அபிராமியை பார்த்தேன் ரொம்ப கேஷுவலாக இருக்கிறார்கள். இதேபோன்று எப்பொழுதும் இருக்க வாழ்த்துகிறேன்.


அதேபோன்று இந்த இடத்தின் சொந்தக்காரர் கசாலி, இந்த நிகழ்ச்சி நடைபெற இடத்தை கொடுத்து உதவியாதற்கு நன்றி, மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். கொரோனா காலத்தில் கண் முன்னே பார்த்தோம் கொரோனா வந்த காலத்தில் அனைத்து மருத்துவர்களும் மருத்துவமனையில் தான் இருந்தார்கள். அந்த வகையில் இன்று சேவையாற்ற வந்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அதேபோல் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், அதுவும் சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் போன்றோர்க்கு இது மாதிரியான பயிற்சிகள் மிகவும் முக்கியம், உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய நடிகர் முத்துராமன், அவர் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க நினைப்பார், ஆனால் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பின் போது நெஞ்சுவலி வந்து விட்டது. எங்களது குடும்ப நண்பர் அவர் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். ஆயினும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்த அவருக்கே எதிர்பாராத நிலை ஏற்பட்டது..


ஆகையால் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்று இல்லை யாருக்கு வேண்டுமானாலும் , என்ன சூழ்நிலையில் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை தற்போது உள்ளது. ஆகையால் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.


மேலும் சங்கம் நடத்துவது சாதாரண காரியம் அல்ல 100 நல்ல காரியங்கள் செய்தாலும் அதை விட்டு விடுவார்கள் எங்கோ செய்யும் ஒரே ஒரு தவறை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பேசக் கூடியவர்கள்தான் இன்று பொதுவாக எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஒருமுறை இப்படித்தான் நடிகர் சங்க அலுவலக கட்டடத்தை லீசுக்கு விட்டு விட்டார்கள் என தெரிந்ததும், அதை மீட்க ஏழு வருடங்கள் போராடினேன்,


அன்று எனக்கு துணை நிற்க ஒரு நடிகரும் வரவில்லை, எப்படியோ போராடி கோர்ட்டில் ஒரு ஆர்டர் வாங்கினேன் ஆனால் அன்று எனக்கு உறுதுணையாக இருந்தது இந்த பத்திரிகை துறையினர் மட்டும்தான் அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அன்று உண்மை செய்திகளை வெளியிட்டு இந்த பூச்சி முருகனை அடையாளம் காட்டினார்கள். யார் இந்த பூச்சி முருகன் என்று அட்டை படத்தில் தலைப்பாகவே வெளியிட்டார்கள். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஒரு சங்கத்தை நிர்வகிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனவே தான் கூறுகிறேன் சங்கத்தை நடத்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று. பத்திரிக்கையாளர் சங்கத்திற்காக நீங்களும் கூடிய விரைவில் ஒரு கட்டிடத்தை வாங்க வேண்டும். எங்களுடைய சங்கத்தின் கட்டட பணியை பேங்கில் லோன் எடுத்து மீண்டும் தொடங்க உள்ளோம் திறப்பு விழாவை விரைவில் அறிவிக்கிற்றோம். நீங்கள் அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும்.


எனது அடையாளமே ஆர்ப்பாட்டம், போராட்டம் தான், அந்த அடையாளத்துக்கு பத்திரிகையாளராகிய நீங்கள் தான் முக்கியமானவர்கள். பத்திரிகை இன்று நல்ல விஷயங்களையும் எடுத்துக் கூறுகின்றன தவறான விஷயங்களையும் தருகின்றன, தற்பொழுது ஒரு ஒரு கட்டுரை படித்தேன், படம் பிடித்தவரயே பழி வாங்கிய படம் என்ற தலைப்பில் அமைந்திருந்தது.1993-ல் தெற்கு சூடானில் ஒரே பஞ்சம், சாப்பாட்டுக்கே பஞ்சம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் கெவின் கார்டெர் (Kevin Carter) என்ற ஒரு புகைப்பட கலைஞர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு புளிஷேர் (Pulitzer Prize) என்ற விருதும் கிடைத்தது. அந்த புகைப்படம் எப்படி இருக்கும் என்றால் ஒரு ஐந்து வயது சிறுவன் பசியால் எலும்புக்கூடு போல் இருப்பதாகவும், அவன் எதிரே ஒரு கழுகு கொத்தி தின்ன தயாராக இருப்பது போல் இருக்கும்.


அந்தப் புகைப்படத்தை எடுத்ததால் தான் அவருக்கு அந்த விருது கிடைத்தது, அந்த புகைப்படக் கலைஞரை அவருடைய நண்பரான பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்கிறார் நீங்க ஒரு போட்டோ எடுத்தீர்களே அந்த குழந்தையும் அந்த பருந்தும் இருக்குற மாதிரி, நீங்க போட்டோ எடுத்ததற்குப் பின் அந்த குழந்தை என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே அந்த புகைப்பட கலைஞர் நான் விமான டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் அவசரமாக கிளம்பிவிட்டேன் என்று பதில் சொன்னார். அதற்கு அந்த பத்திரிகையாளர் சொன்னார் அங்க இரண்டு கழுகு இருந்தது, ஒரு கழுகு அந்த குழந்தையை தின்பதற்காக, இன்னொரு கழுகு அதை வியாபாரம் செய்ய என்று சொன்னார், நண்பர் கேட்ட இந்த கேள்வியில் அந்த புகைப்பட கலைஞர் மனம் உடைந்து சிகரெட் குடிச்சு ஒரு சில மாதத்தில் இறந்தும் விட்டதாக ஒரு செய்தி படித்தேன்.


இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் எழுத்து, உங்கள் ஃபோட்டோ என்பது சாதாரண விஷயம் அல்ல அது ஒருவரை வாழ வைக்கும் ஒருவரை சாக வைக்கும் இதை நான் ஒரு உதாரணத்திற்காகத்தான் சொல்கிறேன். எந்த காரணத்திற்காகவும் சொல்லவில்லை எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லோரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்று கூறினார்.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பேசிய போது, எங்க அம்மா அவங்களுடைய ஹெல்த்தை உண்மையாக சரியாக கவனித்துக் கொள்ள மாட்டார்கள், ஒரு நாள் திடீரென்று அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை ஏற்பட்டது, அன்று முதல் அவர் மிகவும் மனம் உடைந்து போனார், அதன் காரணமாக வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஒன்றென்றால் அந்த வீடு என்ன ஆகும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், இது போன்ற மருத்துவ முகாம் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இதில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கும் நன்றி, பூச்சி முருகன் சார் பேசியதுபோல் ஹெல்த் நல்லா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும், பூச்சி முருகன் சார் மற்றும் எனது நண்பன் புகழ் ஆகியோருடன் இந்த மேடையை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எனது அடுத்தடுத்த படங்கள் மூலமாக உங்களையெல்லாம் மகிழ்விப்பேன் உங்களுடைய பேராதரவு என்றும் எனக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், பங்குபெற அழைத்தமைக்கு நன்றி எனக் கூறினார்.

நடிகர் புகழ் பேசியதாவது பத்திரிகையாளர்கள் என்றாலே ஒரு பயம்தான் எனக்கு, யாராவது ஏதாவது கேள்வி கேட்டுட்டா எனக்கு படபடன்னு வந்துரும் சும்மா அதுவும் மைக்க கொடுத்தாலே மயக்கம் வந்துரும் அப்படி இருக்க கவிதா அக்கா, தங்கம் நம்ம பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக ஒரு மருத்துவ முகாம் நடத்தணும்னு கூப்பிட்டாங்க சரிக்கா வரேன் என்றேன், ஏன்னா ஒரு விஷயத்தை மக்களிடம் எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் போராடுகிறார்கள், நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள், தற்பொழுது ரிலீசாகிய எனது அயோத்தி படத்தைக் கூட நல்ல முறையில் எழுதி இருந்தார்கள் ஆனால் யாருக்கும் என்னால் நன்றி கூற இயலவில்லை அதனால் இன்று எல்லோருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களுக்கு துணை நிற்கிறீர்கள் அதற்கு மிகுந்த நன்றி, அடுத்து ஆகஸ்ட் 16, 1947 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அதற்கும் உங்களுடைய சப்போர்ட் தேவை, அவர்களுக்கு என்றுமே ஒரு சகோதரனாய் இருப்பேன் மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எனக் கூறினார்...

bottom of page