top of page

சிம்ஹாவின் 'வசந்த முல்லை'




விரைவில் வெளிவர இருக்கும் சிம்ஹாவின் 'வசந்த முல்லை'

பிறந்த நாள் கொண்டாடும் சிம்ஹா புதிய படமொன்றில் நடித்துள்ளார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார்.


சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது.


'வசந்த முல்லை' படக்குழுவினர் விவரம்:


தயாரிப்பு நிறுவனங்கள்: எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி


தயாரிப்பு மேலாளர் - நாகராஜ் ஆர்.கே


கதை, திரைக்கதை, இயக்கம் - ரமணன் புருஷோத்தமா


வசனம் - பொன்னி வளவன்


ஒளிப்பதிவு - கோபி அமர்நாத்


இசையமைப்பாளர் - ராஜேஷ் முருகேஷன்


எடிட்டர் - விவேக் ஹர்ஷன்.


சண்டைக் காட்சிகள் - ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சில்வா


ஆடை வடிமைப்பு - நந்தினி என்.கே


விளம்பர வடிவமைப்பு - டியூனி ஜான்.


பி.ஆர்.ஓ - யுவராஜ்

bottom of page