top of page

இந்திக்கார கதாநாயகனுக்கு நடிப்புடன் தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்!


நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்!


ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார்.


தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதை தான் "ரவாளி".



கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்து, கதாநாயகனையே படத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார்.


ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.



கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.



சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "ரவாளி" படத்தின் பாடல் இசையை இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார்.


PRO_கோவிந்தராஜ்

bottom of page