top of page

இன்று பிறந்த நாள் கொண்டாடும்'ஹேண்ட்சம் லுக்' இளைஞன்'கணேஷ் வெங்கட்ராம்'


கணேஷ் வெங்கட்ராம், நம்ம வீட்டு ஹேண்ட்சம் லுக் இளைஞன் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் !


வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளும் கணேஷ் தற்போது ரகளையான தாடியுடன் இளைஞன் லுக்கில் அசத்துகிறார். இந்த புதிய லுக்கில் அவரது புகைப்படங்கள் படு அசத்தலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.




அனைத்து மொழி திரைத்துறையிலும் பிஸியாக இயங்கி வரும் கணேஷ் வெங்கட்ராம் தமிழில் “உன் பார்வையில் மற்றும் ரெட் சாண்டல்வுட்” படங்களிலும், தெலுங்கில் இரு படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். அடுத்ததாக முன்னணி ஓடிடி தளம் தயாரிக்கும் புதிய பொலிடிகல் திரில்லர் தொடரில் நடிக்கவுள்ளார்.



நடிகர் கணேஷ் வெங்கட்ராம் எப்போதும் சமூகநல நோக்குடன் செயல் பட்டு வருகிறார். பொதுபிரச்சனைகளிலும் தனது கருத்தை அழுத்தமாக தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மண்ணை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மண்னைப் பாதுகாப்போம் குழுவிற்கு தன் முழு ஆதரவை வழங்கியுள்ளார்.




தன் பிறந்த நாள் சிறப்பாக கோவளம் கடற்கறையை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நிகழ்வில் பெருமளவில் கல்லூரி மாணவர்கள் & தன்னார்வலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். "நாம் நம்மை தனிமைப்படுத்தப்பட்டவர்களாக பார்ப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது, மற்றும் பிரச்சனை மற்றும் தீர்வின் ஒரு பகுதியாக நாம் இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார். "நீங்கள் வாழும் சூழலுக்கு ஒரு நல்லதை செய்த நீங்கள் பிறந்த நாளை விட சிறந்த நாள் எதுவுமில்லை" எனவும் - அவர் உற்சாகமாக கூறுகிறார்.


கணேஷ் வெங்கட்ராம் உடைய இந்த நல்ல பழக்கத்தை இன்னும் பலர் பின்பற்றுவார்கள் என்று நம்பலாம். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் அவர்களுக்கு அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


bottom of page