"பிஸ்கோத்" விமர்சனம் !

சிறு தொழிலாக பிஸ்கட் கம்பெனியை ஆனந்தராஜுடன் இணைந்து நடத்தி வரும் சந்தானத்தின் தந்தையான ஆடு களம் நரேன், தனது பிஸ்கட் கம்பெனியை மிகபெரிய பிஸ்கட் நிறுவனமாக மாற்றி சிறுவனாக இருக்கும் தன் மகன் சந்தானம் பெரியவனானதும் தன்னுடைய பிஸ்கட் கம்பெனியின் அதிபராகஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
அவர் நினைத்தபடி அவரது பிஸ்கட் கம்பெனியை மிகப்பெரிய கம்பெனியாக மாற்றுகிறார் ஆடு களம் நரேன். இந்நேரத்தில் சிறுவனான சந்தானத்திடம்
நீ வளர்ந்து ஆளானதும் எனது பிஸ்கட் கம்பெனிக்கு முக்கிய பொறுப்புக்கு நீதாண்டா வரணும் என தன்ஆசையை சொல்லி தூங்க செல்ல,விடிந்ததும் யாரும் எதிர்பார்க்காத வகையில்திடீரென இறக்கிறார் ஆடு களம் நரேன்.

ஆனந்தராஜ் பிஸ்கட்கம்பெனியின் அதிபராக உருமாற ,
வாலிபனாக அதே பிஸ்கட் கம்பெனியில் தொழிலாளியாக வேலைசெய்கிறார் சந்தானம்.
இந்நிலையில் சந்தானம் அவ்வப்போது சென்று வரும் முதியோர்இல்லத்தில் சௌகார் ஜானகியை சிலர்சேர்த்து விட ,இரவு நேரத்தில்தன் பேரனைப்போல சந்தானத்தை நினைத்து சில வரலாற்று கதைகளை சௌகார் ஜானகி சொல்ல , சந்தானத்தின் வாழ்க்கையிலும் அவர் சொல்லும் கதைகள்போல நிகழ்வுகள் நடைபெறுகிறது .
இந்நேரத்தில் தனது கம்பெனியை விரிவு படுத்த சந்தானம் சென்று வரும் முதியோர் இல்லத்தை இடித்து புதியகட்டிடம் கட்டுவதற்கான முழு அதிகாரத்தையும் பதவி உயர்வு கொடுத்து சந்தானத்திடம் ஒப்படைக்கிறார் ஆனந்தராஜ் .

அவரது தந்தையின் ஆசைப்படி சந்தானம் பிஸ்கட்கம்பெனியின் அதிபராக மாறினாரா!!
ஆனந்தராஜ்திட்டப்படி முதியோர் இல்லத்தை இடித்து புதியகட்டிடம் கட்டுவதற்கான செயலை சந்தானம் தொடங்கினாரா!!
என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் படம்தான் "பிஸ்கோத்"
காமெடி கலந்த கதையின் நாயகனாக சந்தானம்
7 மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் கதையுடன் சேர்ந்த காமெடி வசனங்களில் படம் முழுவதும் ஜொலிக்கிறார் சந்தானம் ! சௌகார் ஜானகி சொல்லும் வரலாற்று கதைகளை ராஜ தர்பார் காட்சிகளாக படமாக்கியிருக்கும் விதம் ரசிக்கும்படி உள்ளது
நாயகிகள் தாரா அலிஷா பெர்ரி , ஸ்வாதி முப்பலா கதைப்படி இவர்களது நடிப்பு சிறப்பு

நல்லவரா ! கெட்டவரா ! என ரசிகர்கள் கேள்வி கேட்கும்படி அமைந்துள்ளது ஆனந்தராஜின் கதாபாத்திரம் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், மாஸ்டர் சிவசங்கர் , வில்லனாக பரத் ரெட்டி, சவுகார் ஜானகி என படத்தில் நடித்த அனைவரது பங்களிப்பும் சிறப்பு !
ரதனின் இசையும் , சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் .
வேகத்தடை இல்லாத திரைக்கதையில் காமெடி கலந்த வசனங்களுடன் அனைவரும் குடும்பத்துடன் சிரித்து ரசிக்க கூடிய விதத்தில் காட்சிகள் அமைத்து பார்ப்பவர்கள் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாத படமாக "பிஸ்கோத்"
ரேட்டிங் - 3.5 / 5