நடிகை குஷ்பு சென்ற கார், லாரி மீது மோதி விபத்து! சதி வேலையா ?

நடிகை குஷ்பு பயணித்த கார் மதுராந்தகம் அருகே விபத்து:
செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.