top of page

பிரம்மாண்டமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்!


கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்


இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின் பான்-இந்திய திரைப்படமான 'கீடா கோலா' பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது.


இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டுபடங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல் என்டர்டெய்னர் படங்களை எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், இம்முறை தனது டிராக்கை மாற்றிக்கொண்டு புதிய க்ரைம் காமெடி படமான ‘கீதா கோலா’வை பார்வையாளர்களுக்குக் கொண்டு வரவிருக்கிறார்.



விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று செவ்வாயன்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ஹீரோக்கள் சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.


ஸ்ரீபாத் நந்திராஜ், சாய்கிருஷ்ணா கட்வால், உபேந்திர வர்மா, விவேக் சுதன்ஷு மற்றும் கௌசிக் நந்தூரி ஆகியோரால் தயாரிக்கப்படவுள்ள இப்படம் 2023 ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.



இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுகிற குழுவின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.


எழுதி இயக்கியவர்: தருண் பாஸ்கர் தாஸ்யம்


தயாரிப்பு நிறுவனம்: விஜி சைன்மா


கதை இலாகா - குயிக் ஃபாக்ஸ்


தயாரிப்பாளர்கள்: ஸ்ரீபாத் நந்திராஜ், சாய்கிருஷ்ணா கட்வால், உபேந்திர வர்மா, விவேக் சுதன்ஷு, கௌசிக் நந்தூரி


மக்கள் தொடர்பு: யுவராஜ்

bottom of page