top of page

அனைவருக்கும் பிடித்த படமாக “கொம்பு வச்ச சிங்கம்டா”இருக்கும்- இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன்


பேரன்போடு இயக்குநர் S.R.பிரபாகரன் எழுதிக்கொள்வது..


பத்திரிக்கை துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி, பண்பலை, YouTube போன்ற அனைத்து ஊடகங்களை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இன்று எனது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இது வரை “சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்” என எனது மூன்று படைப்புகளுக்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்கு பெரும் நன்றிகள். அதே ஆதரவை எனது நான்காவது படைப்பிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன் உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல


என்றும் அன்புடன்

எஸ் ஆர் பிரபாகரன்

இயக்குநர்

bottom of page