தேசிய தலைவர் திரைப்படத்தில் டப்பிங் பேசினார் பாரதிராஜா
---------------------------------------
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் M.M.பாபு SSR சத்தியா G.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் R அரவிந்தராஜ் இயக்கிவருகிறார் இதில் தேவராக பஷீர் நடித்துவருகிறார் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் கதையின் கருவை
AM சௌத்ரி வடிவமைத்துள்ளார் இதன் பணிகள் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது இதில் தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து தேவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார் அதற்கான டப்பிங் பேசிய பாரதிராஜா இயக்குனர் அரவிந்தராஜை வெகுவாக பாராட்டினார் தேவராக நடித்துள்ள பஷீரை இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்று கண்கலங்கி கூறினார்
Comentários