top of page

தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக 'கட்டில்' தேர்வு


பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக #கர்ணன் மற்றும்

தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படமாக #கட்டில் தேர்வு

Innovative international film festival

Bangalore

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.

அதன் நிறைவு விழாவில் இன்று(17.10.21) சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.




மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.



சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.


விரைவில் தியேட்டர்களில் கட்டில் திரைப்படும் என்று இயக்குனர்

இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்

bottom of page