top of page

ஜூலை 28 உலமெங்கும் வெளியாகும் பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில்“விக்ராந்த் ரோணா”


பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பான் வேர்ல்ட் 3-D ஃபேண்டஸி திரைப்படம் “விக்ராந்த் ரோணா” 2022 ஜூலை 28 உலமெங்கும் வெளியாகிறது !


பாட்ஷா கிச்சா சுதீப் உடைய பிரமாண்ட திரைப்படமான “விக்ராந்த் ரோணா”, பான் வேர்ல்ட் 3-D ஃபேண்டஸி திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பான் வேர்ல்ட் மெகா திரைப்படமான, ‘விக்ராந்த் ரோணா’ ரிலீஸ் தேதி இறுதியாக வெளியானது, இதைவிட பெரிதான பரிசு ரசிகர்களுக்கு எதுவும் இல்லை! இது இதுவரை பார்த்திராத ஒரு 3டி ஃபேன்டஸி அதிரடி சாகச காவியம், இந்த டீஸர் பாட்ஷா சுதீப்பை “விக்ராந்த் ரோனா” என்ற எதிரிகளை பயமுறுத்தும் இருளின் அரசனாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


இப்படத்திலிருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய சினிமா அனுபவத்தின் ஒரு சிறு பார்வை இந்த காட்சி துணுக்கில் வெளிப்பட்டுள்ளது, இந்த டீஸர் பெரிய திரையில் சூப்பர் ஸ்டாரின் ஆண்டி ஹீரோ அறிமுகத்தை விக்ராந்த் ரோணாவின் வடிவத்தில் பிரமாண்ட திரையில் தந்துள்ளது.


இப்படத்தை கொண்டாடும் வகையில் படத்தின் டீசரை முறையே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்ததந்த மொழிகளின் பிரமாண்ட சூப்பர்ஸ்டார்களான சல்மான் கான், சிரஞ்சீவி, மோகன்லால், சிம்பு மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் வெளியிட்டனர்.


குறிப்பாக தயாரிப்பாளர்கள் விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளையும் புதுமையான முறையில் அதிரடியாக வெளியிட்டு வருவதால், இது ஆச்சரியமளிக்கவில்லை. துபாயின் புர்ஜ் கலீஃபாவில் டைட்டில் வெளியீட்டு விழா, நட்சத்திர நடிகர்களின் ஒப்பந்தம், அதனுடன் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் படம் வெளியிடப்படும் என்று அறிவித்தது வரை, 'விக்ராந்த் ரோணா' படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பிரமாண்டமாக அமைந்திருந்தது.


Zee Studios, நிறுவனம் Kichcha Creatiions உடன் இணைந்து தனது அடுத்த மெகா முயற்சியை, பான் வேர்ல்ட் 3D படமான 'விக்ராந்த் ரோணா' படத்தை - கிச்சா சுதீப் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோர் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது.


பான் வேர்ல்ட் 3டி திரைப்படமான “விக்ராந்த் ரோணா” கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாகிறது,


கிச்சா சுதீபா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படத்தை ’ Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிக்கிறார், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ளார். இயக்குநர் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்குகிறார்.


விக்ராந்த் ரோணா திரைப்படம் 2022 ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

bottom of page