top of page

கதையின் நாயகனாக காதல் சுகுமார் நடிக்க "தொடாதே" புதிய படம்!


மக்கள் மனதை தொடும்

""தொடாதே" புதிய படம்!


'காதல்' சுகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்!


பெரும்பாலான கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் 'போதையில் செய்து விட்டேன்' என்பதே அவர்களின் வாக்குமூலமாக . இருக்கிறது. நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் அலெக்ஸ் "தொடாதே" எனும் படத்தை இயக்கியிருக்கிறார். கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ளார்.


நடிகர் 'காதல்' சுகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, பிஆர்ஓ கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார்.

கொடைக்கானல் ,மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இயல்பான கதை மாந்தர்களுடன் மண்ணின் மணம் மாறாமல் "தொடாதே" படமாகி இருக்கிறது.


குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ்.


தொடாதே படம் மக்கள் மனதை தொடும் அளவிற்கு சிறப்பாக தயாரித்து வருகிறார் எஸ்.ஜெயக்குமார்.


படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெளியாகிறது.


PRO_கோவிந்தராஜ்

bottom of page