top of page

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்த 'குருப்'


50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 'குருப்' சாதனை!


நல்ல கதையம்சம் கூடிய படங்கள் வெளியாகும் போது, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் 5 மொழிகளில் வெளியான 'குருப்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் முதல் வாரத்தில் பல்வேறு திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. துல்கர் சல்மானின் அசத்தலான நடிப்பு, ஸ்ரீநாத் ராஜேந்திரனின் துல்லியமான இயக்கம், நிமிஷ் ரவியின் கச்சிதமான ஒளிப்பதிவு, சுஷின் ஷாமின் துள்ளலான இசை என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.


தமிழகத்தில் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரத்தில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பே படத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் 'குருப்' வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியானது 'குருப்'. உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்

bottom of page