top of page

’லத்தி’ - விமர்சனம்!


குற்றவாளிகளை லத்தியை கொண்டு அடி பின்னுவதில் திறமையாக இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் ,,,ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்யும் மனைவி சுனைனா மற்றும் மகன் லிரிஷ் ராகவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில்,,,,, தன்னை ஒருவன் காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்வதாகவும் ,காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டுவதாகவும் ஒரு இளம் பெண் விஷாலிடம் புகார் அளிக்கிறார்.


இளம் ஏழை பெண்ணுக்காக மிரட்டியவனின் வீ ட்டிற்க்கு சென்று பையனது நடத்தைக்காக அவனது அப்பாவை எச்சரிக்கிறார் விஷால்.


இந்த நேரத்தில் அந்த இளம்பெண் கொடூரமாக கற்பழிக்க ப்பட்டு மருத்துவமனையில் போலீசாரிடம் மரண வாக்குமூலத்தில் தன்னை கற்பழித்த குற்றவாளியின் அங்க அடையாளங்களை சொல்லி இறக்கிறார்.


காதலிக்க சொல்லி மிரட்டிய பையன் போலீசிடம் சிக்க ,,,விஷால்.

அவனை லத்தியால் லாடம் கட்டி அடிக்க,,, இப் பிரச்சனையால் மனித உரிமை மீறல் காரணமாக விஷாலை இடை நீக்கம் செய்கிறது காவல் துறை.


சில மாதங்களுக்கு பின் அதிகாரி தலை வாசல் விஜய் மூலம் உயர் அதிகாரி பிரபுவின் சிபாரிசுவினால் மீண்டும் பணியில் சேர்கிறார் கான்ஸ்டபிள் விஷால்.


அரசியல் தலைமையே நடுங்கும் தாதா சுறாவின் மகனான ரமணா அதிகாரி பிரபு மகளை ஒரு இரவு நேரத்தில் காரில் அசிங்கப்படுத்த ,,,, ரமணாவை தேடும் பிரபு,,,, ஒரு நாள் கிளப்பில் போதையில் இருக்கும் ரமணாவை கடத்துகிறார் .


பிளாஸ்டிக் கவரினால் முகத்தை மூடி,,,, கை கால்கள் கட்டிய நிலையில் உள்ள ரமணாவை உயர் அதிகாரி பிரபு லத்தியினால் கான்ஸ்டபிள் விஷாலை லாடம் கட்ட சொல்ல ,,,,


வெறித்தனமாக லத்தியினால் ரமணாவை அடித்து துவைக்கிறார் விஷால் .


சில நாட்களுக்கு பின் தன்னை வெறித்தனமாக தாக்கிய கான்ஸ்டபிள் விஷாலை தன் அடியாட்களுடன் தேடுகிறார் ரமணா .


ரமணா தேடிய கான்ஸ்டபிள் விஷால் ஒரு நாள் வசமாக சிக்க,,,,, திட்டம் போட்டு விஷாலை கொலை செய்ய தன் அடியாட்களுக்கு ரமணா உத்தரவிடுகிறார் .


ரமணாவின் உத்தரவின்படி தன்னை கொல்ல வரும் கொலைகார கும்பலிடமிருந்து விஷால் தப்பித்தாரா ? முடிவில் ரமணாவின் நிலை என்ன ? என்பதை சொல்லும் அதிரடி ஆக்க்ஷன் படம்தான் 'லத்தி'படத்தின் நாயகன் விஷால் அமைதியான குடும்ப தலைவனாக ,,,,, மகன் மேல் பாசம் கொண்ட தகப்பனாக ,,,, கையில் லத்தியை எடுத்தவுடன் கடமைமிக்க போலீஸ் கான்ஸ்டபிளாக,,,, ஆக்க்ஷன் காட்சிகளில் அடியாட்களிடம் மோதும்போது அதிரடி நாயகனாக,,,,, விஷால்,,,, 'முருகானந்தம்' கதாபாத்திரம் படம் முழுவதும் ரசிகர்கள் மனதில் பதியுமளவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


விஷாலின் மனைவியாக வரும் சுனைனா கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !

சிறப்பான நடிப்பில் விஷாலின் மகனாக நடிக்கும் லிரிஷ் ராகவ் !


வெள்ளையாக,,,,, விஷாலுக்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ள ரமணா,,, ரசிகர்கள் மிரளும் வகையில் பாராட்டும்படியான நடிப்பில் மிரட்டுகிறார் !!


தாதாவாக வரும் சன்னி பிஎன் , இளைய திலகம் பிரபு , தலை வாசல் விஜய் , வினோத் சாகர் ,முனிஷ் காந்த் , மிஷா கோஷல், அடியாட்களாக நடித்துள்ள சண்டைக்கலைஞர்கள் என அனைவருமே நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் !


ஒளிப்பதிவாளர்கள் பாலகிருஷ்ணா -பாலசுப்பிரமணியம் படத்திற்கு பக்க தூணாக,,,, ஆக்க்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கின்றனர் !


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் ! கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை மிரட்டல் !


படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என்.பியின் பட தொகுப்பு படத்திற்கு பலம் !


அதிகளவில் சண்டைக்கலைஞர்களுடன் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக நாயகன் விஷால் மோதும் ஆக்க்ஷன் காட்சிகளை திறமையாக அமைத்ததில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் தனித்துவமாக ஜொலிக்கிறார் !


அமைதியாக வாழும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் மோதும் தாதாவும் அவரது மகனும் ,, இந்த கதையை மையமாக கொண்டு தெளிவான ,,,, வேகமான திரைக்கதை அமைப்புடன் இது வரை திரையுலகில் வராத அதிகளவில் சண்டைக்கலைஞர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள ,,,,, விஷாலின் ஆக்க்ஷன் காட்சிகளுடன் முடிவில் என் ராசய்யா எங்கே...என விஷால் கதறி அழும்போது படம் பார்க்கும் ரசிகர்கள் கண்கள் கலங்குமளவில் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும்படியான அதிரடி ஆக்க்ஷன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வினோத் குமார்.
bottom of page