top of page
mediatalks001

இனிதே துவங்கிய மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 'மெகா157' படத்தின் ஆரம்பகட்ட பணிகள்!!


மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் - மெகா157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது !!


மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் மெகாஸ்டார் ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டமாக அமைந்துள்ளது, முன்னணி தயாரிப்பு UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் #Mega157 திரைப்படம், மெகாஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டது. இயற்கையின் ஐந்து கூறுகளை காட்டும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பெரும் அதிர்வை உருவாக்கி வருகிறது. இந்த கற்பனை சாகசத்தை UV கிரியேஷன்ஸ் எனும் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.



இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்குவதாக படத்தின் இயக்குநர் வசிஷ்டா அறிவித்துள்ளார். சோட்டா கே நாயுடு கேமராவை ஒளிப்பதிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


“மெகா படத்திற்கு ஒரு மெகா தொடக்கம் 🌟#MEGA157 ப்ரீ புரடக்‌ஷன் பணிகளைத் தொடங்குவதன் மூலம் உயிர் பெறுகிறது! விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு சினிமா சாகசத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளோம்! @KChiruTweets @UV_Creations @NaiduChota,” என்று வசிஷ்டா ட்வீட் செய்துள்ளார், அவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவரது தயாரிப்பாளர் மற்றும் DOP உடன் இணைந்து ஒரு படத்தையும் இந்த டிவிட்டுடன் பகிர்ந்துள்ளார்.


இம்மாபெரும் பிரமாண்ட படைப்பில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர்கள் பற்றிய விபரம் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


நடிகர் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி


தொழில் நுட்ப குழு

எழுத்து & இயக்கம் : வசிஷ்டா

தயாரிப்பாளர்கள் : வம்சி, பிரமோத், விக்ரம்

தயாரிப்பு நிறுவனம் : UV கிரியேஷன்ஸ்.

ஒளிப்பதிவு - சோட்டா K நாயுடு

Comments


bottom of page