'நடுவன்' விமர்சனம்

கொடைக்கானல் பகுதியில் தேயிலை தொழிற்சாலையை நண்பன் கோகுல் ஆனந்துடன் இணைந்து நடத்தி வருகிறார் பரத் .
நண்பன் கோகுல் ஆனந்த் நினைத்த நேரமெல்லாம் குடி போதையில் இருப்பதால் , தேயிலை தொழிற்சாலை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை முன்னின்று கவனிக்கிறார் .
இந்நிலையில் ,பரத் தன் வீட்டில் தங்கி தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்க்கு , உறவுக்காரரின் மகனாகிய அருவி பாலாவை வரவழைக்கிறார்.
பரத் மனைவி அபர்ணா வினோத் , மற்றும் தனது பெண் குழந்தையுடன் சந்தோசமாக வாழும் சூழ்நிலையில்,
மனைவி அபர்ணா வினோத்தும் குடும்ப நண்பனான கோகுல் ஆனந்தும், பரத் இல்லாத நேரத்தில் கள்ளக் காதலர்களாக வீட்டில் இருவரும் சல்லாபத்தில் ஈடுபடும்போது உறவுக்காரரின் மகனாகிய அருவி பாலா இந்த தகாத உறவை பார்த்து விட !
இதனை கவனித்த கோகுல் ஆனந்த் அருவி பாலாவை யாருக்கும் சொல்லக்கூடாது ? முக்கியமாக பரத்துக்கு தெரியகூடாது ! என கொலை வெறியுடன் மிரட்டுகிறார்.
அபர்ணா வினோத்தின் கள்ள காதல் விவகாரம் பரத்துக்கு தெரிந்ததா ?
தகாத உறவை பார்த்த அருவி பாலா தான் பார்த்ததை பரத்திடம் சொன்னாரா ? குடும்ப நண்பனாக இருந்து பரத்துக்கு துரோகம் செய்த கோகுல் ஆனந்த் நிலை என்ன ?
என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'நடுவன்'
கதையின் நாயகனாக பரத் ஆரவாரமில்லாத அமைதியான நடிப்பு !
பரத்தின் மனைவியாக அபர்ணா வினோத் கதைக்கேற்றபடி இவரது நடிப்பு சிறப்பு !
நண்பனாக கோகுல் ஆனந்த் சரியான தேர்வு !
தரண் இசையில் பாடல்களை விட க்ரைம் படத்திற்கான பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.
யுவாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கொடைக்கானலின் குளுமை .
கள்ள காதல் தொடர்பான இந்த கதையில் எந்த வித ஆபாச,விரச வசனங்கள் எதுவும் இல்லாமல் கதையை மட்டும் மனதில் கொண்டு நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் மிக கவனமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஷாரங்