top of page

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்


விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்..’

சுசீந்திரன் இயக்கத்தில் திண்டுக்கல்லில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமானது.


நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில்,

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள்.

திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.


முதல் நாள் படபிடிப்பில் விஜய் ஆண்டனி,

தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) ஆகியோர் பங்கேற்றார்கள்.

தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.


இதையடுத்து, கொடைக்கானல்,தேனி,காரைக்குடி,கோபிசெட்டிபாளையம்,பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது..


எழுத்து, இயக்கம் : சுசீந்திரன்

இசை : D.இமான்

ஒளிப்பதிவு : விஜய் k. சக்கரவர்த்தி

எடிட்டர் : ஆண்டனி

ஆர்ட் டைரக்டர் : K.உதய குமார்

பாடல்கள் : யுகபாரதி

நடனம் : ஷோபி

ஸ்டண்ட் : ஸ்டன் சிவா

காஸ்ட்யூம் டிசைனர் : ராதிகா சிவா

பி.ஆர்.ஓ. : ஜான்சன்

டிசைன்ஸ் : ட்யூனி ஜான்

இணை தயாரிப்பு : கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம்: நல்லுசாமி பிக்சர்ஸ்

தயாரிப்பு : தாய் சரவணன்.

bottom of page