top of page
mediatalks001

ஹைதராபாத்தில் தொடங்கிய 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு !


'நேச்சுரல் ஸ்டார்' நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.

'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா... இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்களை கொண்டதாக இருக்கும் என்றும், இதில் முன்னணி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இதனை தவிர்த்து அதிரடியான சண்டைக் காட்சிகளையும், சாகச காட்சிகளையும் படமாக்கப்படவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் நானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்தத் திரைப்படம் தொடர்பாக இதற்கு முன் வெளியிடப்பட்ட 'Unchained' எனும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதைப் போல் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.‌ முரளி. ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை ராம்- லக்ஷ்மன் அமைக்கின்றனர்.

'நேச்சுரல் ஸ்டார்' நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌

Comments


bottom of page