top of page

‘‘எனக்கொரு WIFE வேணுமடா’’பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குனர் சீனு ராமசாமி


‘‘எனக்கொரு WIFE வேணுமடா’’

பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் சீனு ராமசாமி

பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார்.

இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் இன்று வெளியிட்டார்.

‘நித்தம் ஒரு வானம்’, சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் செபாஸ்டின் அந்தோணி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் - ஜியா. ஒளிப்பதிவு - அபிஷேக். படத்தொகுப்பு - பிரசாத் ஏ.கே.

தயாரிப்பு - அமோகன். இசை வடிவமைப்பு - மிதுன். ஒலிப்பதிவு - கோகுல் ராஜசேகர். மேக்அப் - பவித்ரா. பிஆர்ஓ - டீம் ஏய்ம் சதீஷ்.

Comments


bottom of page