'லாபம்' விமர்சனம்

பெரு வயல் கிராமத்தில் உள்ள ஜெகபதிபாபு மக்களிடம் விவசாய நிலங்களை கைப்பற்றி பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலையை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட ,
சில வருடங்களுக்கு பின் தன் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி , விவசாய நிலங்களில் தொழிற்சாலையை கட்டும் ஜெகபதிபாபுவை எதிர்க்கிறார் . இந்நிலையில் கிராம மக்களான விவசாயிகளை ஓன்று திரட்டி கூட்டுப்பண்ணை முறையில் விவசாய திட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார் .
மேலும் ஜெகபதி பாபுவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் விஜய் சேதுபதி போட்டியிடுகிறார் .
விவசாய சங்க தேர்தலில் விஜய் சேதுபதி வெற்றி பெற்றாரா? ஜெகபதி பாபுவிடம் இருந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் விஜய் சேதுபதி காப்பாற்றினாரா ! என்கிற கேள்விகளுக்கான விடையளிக்கும் படம் தான் 'லாபம்'
கதையின் நாயகனாக விஜய் சேதுபதி !! நம் நாட்டில் உள்ள சமூக பிரச்சனைகள், விவசாயத்தின் பலன்கள் , நீலகிரி தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகள் ,விவசாயிகள் பணம் எப்படி சம்பாதிப்பது என விஜய் சேதுபதி படம் முழுவதும் பேசும் வசனங்களால் அவரது கதாபாத்திரம் சமூக போராளியாக அவரை சித்தரிக்கிறது !
விஜய் சேதுபதியின் காதலியாக வரும் ஸ்ருதி ஹாசன் சிறப்பான நடிப்பில் கவர்கிறார் !
வில்லனாக நடித்துள்ள ஜெகபதிபாபு முதல் ,விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் கலையரசன், ரமேஷ் திலக், டேனி, நித்தீஷ் வீரா, பிருத்வி பாண்டியராஜன், ஜெய்வர்மன், சாய் தன்ஷிகா என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
படத்திற்கு கூடுதல் பலமாக டி இமான் இசையும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும்.
விவசாயிகளின் நிலைமையை பற்றியும் , விளை நிலங்களின் நன்மையையும், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதினையும் விவசாய கரு கொண்ட கதையினை மையமாக வைத்து இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
'லாபம்' நஷ்டமல்ல !!