top of page

'சீதா ராமம்' விமர்சனம் !

Updated: Aug 9, 2022


பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாக இருந்த சச்சின் கடேகர் 20 வருடங்களுக்கு முன் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த துல்கர்சல்மான் தனது காதலி சீதாமஹாலக்ஷ்மிக்கு எழுதிய கடிதத்தை லண்டனில் படிக்கும் தன் பேத்தியான ராஷ்மிகா மந்தானா வந்தால் சீதாமஹாலக்ஷ்மியிடம் ஒப்படைக்குமாறு இறக்கும் தருவாயில் குடும்ப வக்கீலிடம் கொடுத்து விட்டு இறந்து போகிறார் .


லண்டனில் இருந்து சச்சின் கடேகரை பார்க்க பாகிஸ்தான் வரும் ராஷ்மிகா மந்தானா அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்த நிலையில்,,,, சீதாமஹாலக்ஷ்மியிடம் கொடுக்க வேண்டிய கடிதத்தை பற்றி வக்கீல் சொல்ல அக் கடிதத்தை எடுத்து கொண்டு சீதாமஹாலக்ஷ்மி இருக்கும் இடத்திற்கு ராஷ்மிகா மந்தானா செல்கிறார் .

அங்கு அவருக்கு சரியான தகவல் கிடைக்காததால்,,, இந்திய ராணுவ மையத்துக்கு சென்று துல்கர்சல்மானை பற்றி விசாரிக்க அங்குள்ள ராணுவ அதிகாரி துல்கர்சல்மானுடன் பணி புரிந்த நண்பனது முகவரி தருகிறார் .

அவர் துல்கர்சல்மானை பற்றிய விவரங்களை சொல்ல ,,,,,,,,,1964 ல் காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்ற விவகாரத்தில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் நடத்தவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தை இந்திய இராணுவத்தில் பணிபுரியும் துல்கர்சல்மான் சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துவதால்,,,,, நாடெங்கும் புகழ்பெறுகிறார்.



அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகின்ற வானொலி செய்தியாளர் ரோகிணி எடுக்கும் பேட்டியில் தான் ஓர் அனாதை என்று துல்கர்சல்மான் சொல்கிறார். அன்றிலிருந்து இந்தியாவில் வாழும் மக்களால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் துல்கர்சல்மானுக்கு வரத்தொடங்குகின்றன.


வரும் கடிதங்களில் ஒரு கடிதத்தில் மட்டும் நான் உங்கள் காதல் மனைவி சீதாமஹாலக்ஷ்மி எழுதுகிறேன் என அன்பான காதல் கலந்த எழுத்துக்களுடன் அடிக்கடி கடிதம் வர துவங்க அக்கடிதத்தில் வழிந்த காதலால் ஈர்க்கப்படும் துல்கர்சல்மான், அனுப்புநர் முகவரி இல்லாத அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு தன் காதல் மனைவி சீதாமஹாலக்ஷ்மி யார் எனத் தேடிப்போகிறார் .


தேடிப்போகும் துல்கர் சல்மான் சீதா மஹாலக்ஷ்மியை கண்டிபிடித்தாரா?


இறுதியில் துல்கர்சல்மானின் நிலை என்ன ?


20 வருடங்களுக்கு பின் துல்கர் சல்மான் எழுதிய கடிதத்தை எடுத்து கொண்டு சீதாமஹாலக்ஷ்மியை தேடும் ராஷ்மிகா மந்தானா கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தாரா ? என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் 'சீதா ராமம்'


ராணுவ வீரராக நடித்துள்ள நாயகன் துல்கர் சல்மான், காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கும் உடல் மொழியில் எதார்த்த நடிப்பில் ஜொலிக்கிறார் .


சீதா மஹாலக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மிருணாள் தாகூர் அசத்தலான அழகில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி துல்கர்சல்மானின் காதலி சீதா மஹாலக்ஷ்மியாகவே வாழ்கிறார் .



1964 இல் தொலைந்த சீதாமகாலட்சுமியை 1985 ல் வேண்டாவெறுப்பாகத் தேடிப்போகும் வேடத்தில் ராஷ்மிகா மந்தனா இயல்பான நடிப்பில் அசத்தல் ! அவர் கதாபாத்திரம் தொடர்பான திருப்புமுனையான சஸ்பென்ஸ் படத்திற்கு பக்க பலம்


ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுமந்த், ராஷ்மிகாவின் நண்பராக நடித்திருக்கும் தருண் பாஸ்கர், வெண்ணிலா கிஷோர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு


உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவில் காஷ்மீரத்தின் அழகு,பிரமாண்ட அரண்மனையின் பிரமிப்பு ஆகியன மட்டுமின்றி ராணுவ வீரர்களின் உணர்வுகளை காட்சிகளாக செதுக்கியுள்ளார்கள் பி.எஸ்.வினோத்-ஸ்ரேயாஸ் கிருஷ்ணா !



விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும் அனைத்தும் மயிலிறகால் வருடும் ரகம்.

கதையின் வேகத்திற்கு இணையாக பாராட்டும்படியான பின்னணி இசை . .


இதுவரை வெளி வந்த மிக சிறந்த காதல் காவியங்களில் அழுத்தம் நிறைந்த கதையில் உருவாகிய உலக தரம் வாய்ந்த அற்புதமான 'சீதா ராமம்' படமும் இணையப்போவது உறுதி .


1964 ம் ஆண்டு பின்னணியில் கதை தொடங்கி 85களில் முடிவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தாலும் யாரும் பார்க்காத அழகான காதல் கதையில் அழுத்தமான திரைக்கதை அமைப்புடன் பான் இந்தியா பட வரிசையில் மிக பிரம்மாண்டமாக சிறந்த இந்திய காதல் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி.


ரேட்டிங் . 5 / 5


bottom of page