' லால் சிங் சத்தா ' - விமர்சனம் !

பள்ளி பருவத்தில் மற்ற மாணவர்களை போல இல்லாமல் மனவளர்ச்சியில் அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறனில் சிறிய மாற்றம் உள்ள அமீர்கானுக்கு நடக்க முடியாத காரணத்தினால்,,, அவரது அம்மா டாக்டரிடம் அழைத்து செல்கிறார் .
நடப்பதற்கு ஸ்டீல் ராடு ஷுவை பொருத்தும் டாக்டர்,,,,, அமீர்கானின் மனதில்தான் பிரச்சனை காலில் பிரச்சனை இல்லை கூடிய விரைவில் உன் மகன் நடப்பான், ஓடுவான் என சொல்ல ,,,,, பள்ளியில் படிக்க போகும் அமீர்கானை சக மாணவர்கள் இப் பிரச்சனையால் அவமதிக்கின்றனர் .
ஆனால் பள்ளி தோழியான கரீனா கபூர் ஆதரவளித்து ஊக்கமளிக்கிறார்
இந்நிலையில் கல்லூரி பருவத்தில் முட்டாள் பைத்தியம் என உடன் இருக்கும் அனைவரும் கேலியாக பேசினாலும் ஓட்ட பந்தயத்தில் சிறந்த வீரராக சாதிக்கிறார் அமீர் கான் .
நாளடைவில் கரீனாகபூர் மீது கொண்ட நட்பு காதலாக மாற,,,, நடிப்பிலும் மாடலிங் துறையிலும் ஆர்வம் உள்ள கரீனாகபூர் அமீர்கானின் காதலை நிராகரித்து அவரை பிரிந்து வெகு தூரம் சென்று விடுகிறார் .
அதன் பின் இந்திய ராணுவத்தில் சேரும் அமீர்கான். ராணுவத்தில் சிறப்பாகப பணிபுரிந்ததற்காக 'வீர் சக்ரா' விருது வாங்கி சாதனை படைக்கிறார் . பின்னாளில் ஊருக்கு வரும்போது சுய தொழிலுக்கான தொழிற்சாலை தொடங்குகிறார் .
ஆரம்ப கட்டத்தில் வியாபாரத்தில் திணறும் அமீர்கான் பின்பு மிகப்பெரிய தொழிலதிபராகிறார். நீண்ட நாட்களுக்கு பின் அமீர்கானை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு கரீனா கபூர் வருகிறார் .
தன்னை நிராகரித்து சென்ற கரீனா கபூருடன் அமீர் கான் மீண்டும் இணைந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் கதைதான் 'லால் சிங் சத்தா'

ஆரம்பத்தில் நீண்ட தாடியுடன் ரயிலில் பயணிக்கும் அமீர் கான் தன்னுடன் பயணிக்கும் சக பயணிகளிடம் அவரது பள்ளி பருவம் . தனக்கு துணையாய் இருந்த அம்மாவின் அன்பு , ஊக்கமளித்த பள்ளி தோழி, ராணுவ வாழ்க்கை, ராணுவத்தில் பணிபுரிந்தபோது நண்பனின் சந்திப்பு என,,, தான் கடந்து வந்த வாழ்க்கை கதையை பயணிகளிடம் சுவாரஸ்யமாக சொல்கிறார் . அவர் சொல்லும் கதையில்,,,, படம் பார்க்கும் மக்களும் கதையுடன் பயணிக்கிறார்கள்
நாயகன் அமீர்கான் கல்லூரி பருவம் முதல் தொழிலதிபர் வரையிலான கால கட்டத்திற்கு ஏற்றபடி உடலை வடிவமைத்து அப்பாவித்தனமான முகத்துடன் சில காட்சிகளில் அனுதாபப்படுமளவில் 'லால் சிங் சத்தா' என்ற கதாப்பாத்திரமாகவே படம் முழுவதும் வெகுளிதனமான நடிப்பில் சிறந்த நடிகராக வாழ்ந்துள்ளார் .
நாயகியாக அசத்தலான அழகில் கரினா கபூர் கதைக்கேற்றபடி நடிப்பில்
இயல்பு !
சிறு வயது இளைஞனாக வரும் ஷாருக்கான் சாதாரண டிவி நடிகராக அறிமுகமாகி பின் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருப்பதை அமீர்கான் சொல்லும் கதையுடன் இணைத்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி !

அமீர்கானின் அம்மாவாக மோனா சிங், நண்பனாக நாகசைதன்யா, லெஃப்டினென்ட் ஜெனரலாக மானவ் விஜ் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
ப்ரீதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் .
கதைக்கேற்றபடி தனுஜ் டிக்குவின் பின்னணி இசை சிறப்பு !
சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
அதுல் குல்கர்னி எழுதிய திரைக்கதையில் ரசிக்கும்படியான கதையுடன் அத்வைத் சந்தன் இப் படத்தை இயக்கியுள்ளார்.
1
1983ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட், அத்வானியின் ரத யாத்திரை, பஞ்சாப் பொற்கோயில் தாக்குதல் , பிரதமர் இந்திரா காந்தியின் அகால மரணம் ,அவரது இறுதி ஊர்வலம் , அந்த மரணத்தினால் நடைபெறும் பயங்கர கலவரம் ,பாபர் மசூதி இடிப்பு , கார்கில் போர் என்று நாட்டில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை அமீர்கானின் வாழ்க்கையுடன் இணைத்து கதையமைக்கப்பட்ட விதம் பாராட்டும்படி உள்ளது.
ரேட்டிங் . 3.5 / 5