'பேய் மாமா' விமர்சனம்

ஒரு பிரம்மாண்டமான பங்களாவை வாங்க வருபவர்களை அந்த பங்களாவில் பேய் இருப்பதாக சொல்லி வாங்குபவர்களை பயமுறுத்தி விரட்டுகிறார்கள் வில்லன்கள் .
பேய்கள் வசித்து வரும் பங்களாவில் குடும்பத்தோடு செல்கிறார் யோகிபாபு. அங்குள்ள பேய்கள் நாங்கள் வில்லன்களின் துரோகத்தால் கொலை செய்யப்பட்டு பேயாக மாறினோம் ,
நீங்கள் உதவினால் எங்களை கொலை செய்த அவர்களை பழி தீர்ப்போம் என,
தங்கள் சொந்த கதையையும் ,சோக கதையையும் சொல்லி அந்த பேய்கள் யோகி பாபுவிடம் முறையிட,
அந்த பேய்களுக்காக யோகி பாபு பேய் மாமாவாக உருமாறி வில்லன்களை
பழி தீர்த்தாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம் தான்
'பேய் மாமா'
யோகி பாபு, மாளவிகா மேனன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ரமேஷ் கண்ணா ,எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா மனோகர் ,இமான் அண்ணாச்சி, சாம்ஸ், கணேஷ் ,கோவை சரளா,பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என நகைச்சுவை கும்பலுடன் படம் முழுவதும் காமெடி திருவிழாவே நடக்கிறது.
கதையின் நாயகனாக யோகி பாபு, வழக்கமான வசனங்களுடன் காமெடியாக நடிக்கிறார் .
படத்தின் நாயகன் என்பதால் கூடுதலாக சண்டை காட்சிகளில் அசத்துகிறார்.
ராஜ் ஆர்யனின் இசையில் வடிவேலு பேசிய வசனங்களை வைத்து ரசிக்கும்படி ஒரு பாடல் ! பின்னணி இசையும் படத்திற்கு பலம்!
எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் பேய் படத்திற்கு உண்டான காட்சிகளில் மிரட்டல் இல்லை !
பங்களாவில் உள்ள பேய்களின் கதையை மையமாக கொண்டு ரசிகர்கள் கவலையை மறந்து சிரிக்கும் அளவில் சாமியார்களையும் , டிவி நிகழ்ச்சிகளையும் கிண்டல் செய்து
திகிலே இல்லாமல் காமெடி பேய் கதையாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்!