'கடாவர்' - விமர்சனம் !

எரிந்த நிலையில் உள்ள காரில் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடக்கிறார் . இது கொலையா அல்லது விபத்தா , இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க, காவல்துறையில் தடயவியல் நிபுணராக இருந்து உடற்கூறாய்வு செய்யும் அமலா பால் முன்னிலையில் இவ் வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஹரிஷ் உத்தமனிடம் காவல் துறை உயர் அதிகாரி பொறுப்பை ஒப்படைக்கிறார் .
கருகிய நிலையில் இறந்தவரை தடயவியல் நிபுணரான அமலா பால் ஆராய்கையில் அவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டு பின் பெட்ரோலால் சில மணி நேரங்களுக்கு முன்பு எரிக்கப்பட்டுள்ளார்,,,, எலும்புகள் உடைந்த நிலையில் உள்ள,,,, இறந்தவர் உடலை பார்த்து மேலும் சில தடயங்களை அமலா பால் போலீசிடம் விவரிக்க ,,, பின்பு கருகிய நிலையில் எரிந்தவர் நகரில் உள்ள பெரிய மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் என்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர் .
இந்நிலையில் அதே மருத்துவமனையில் இறந்த அதுல்யா ரவியின் கணவரான சிறையில் இருக்கும் திரிகுன்,,, இதய அறுவை சிகிச்சை செய்யும் டாக்டரை ஓவியம் வரைந்து அவரை கொன்று விடுவதாக சபதம் போட,, இக் கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் திரிகுன் மீது சந்தேகப்பட,,,, திரிகுன் சிறையில் இருக்கும்போதே மற்றொரு டாக்டர் கொலை செய்யப்படுகிறார்.
அந்த டாக்டரை கொலை செய்ததும், இதய அறுவை சிகிச்சை டாக்டரை கொலை செய்ததும் ஒரே வகையான மர்ம நபர் என்பதை அமலா பால் தடயவியல் மூலம் கண்டுபிடித்து போலீசிடம் தெரிவிக்கிறார் .
இந்த மர்ம கொலைக்களுக்கான நோக்கம் என்ன ? என்ன காரணத்திற்காக இதய அறுவை சிகிச்சை டாக்டரை கொன்று எரித்தார்கள் ?
இக் கொலைகளில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'கடாவர்'
கதையின் நாயகியாக அமலா பால் ,,,,, புதுமையாக உடல் மொழியிலும் உருவ அமைப்பிலும் வித்தியாசமாக இதுவரை திரையுலகில் எந்த நாயகிகளும் ஏற்றிராத,,, பிணங்களை உடற்கூறாய்வு செய்யும் டாக்டராக தட யவியல் நிபுணராக 'பத்ரா' என்ற கதாப்பாத்திரத்தில்அனுபவபட்ட நடிகையாக படம் முழுவதும் மிரட்டலான நடிப்பில் வாழ்ந்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன் , காப்பகத்தில் வளர்ந்த பெண்ணாக அதுல்யா ரவி, அதுல்யா ரவியின் காதலனாக திரிகுன் மற்றும் முனீஷ்காந்த் , ரித்விகா , வினோத் சாகர் ,வேலு பிரபாகரன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
திரைக்கதையின் வேகத்திற்கு இணையான அரவிந்த் சிங் ஒளிப்பதிவு.
ரஞ்சின் ராஜ் இசையில் பின்னணி இசை மெடிக்கல் க்ரைம் படத்திற்கான மிரட்டல் !
நகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் உடல் உறுப்புக்களை திருடும் குற்ற சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன்,,,, யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியடையும்படியான திருப்புமுனை காட்சிகளுடன் கொலைகளை செய்த முக்கிய கொலையாளி யார் என படம் பார்க்கும் ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில்,,,,, தெளிவான,,,,, வேகமான,,,,,, விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் சஸ்பென்ஸ் நிறைந்த மெடிக்கல் க்ரைம் திரில்லர் படமான 'கடாவர்' படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் .
ரேட்டிங் 3. 5 / 5