' விருமன் ' - விமர்சனம்!

மதுரையில் உள்ள ஒரு ஊரில் பிரகாஷ் ராஜ் தாசில்தாராக இருக்கிறார். இவருடைய நான்கு மகன்களில் கடைசி மகன் கார்த்தி.
பிரகாஷ் ராஜின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் கார்த்திக்கின் தாயான சரண்யா பொன்வண்ணன் கார்த்தி கண் முன்னே தீக்குளித்து இறக்கிறார் .
சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் அவரை கொலை செய்ய வெறியுடன் கத்தியுடன் சிறுவனான கார்த்தி துரத்த ,,,
கோர்ட் உத்தரவின்படி தாய் மாமன் ராஜ்கிரண் உடன் வாழ்கிறார் கார்த்தி.
பிரகாஷ் ராஜை வெறுக்கும் கார்த்தி அடிக்கடி அவருடன் மல்லுக்கட்ட ,,,
எம் எல் ஏ,,,, வி .எம் . சுந்தர் மூலம் கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ் .
இறுதியில் பிரகாஷ் ராஜ்,,, கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் சொத்தை அபகரித்தாரா ? மீண்டும் கார்த்தி குடும்பத்தோடு இணைந்தாரா?
படு பாதக எண்ணத்துடன் வாழ்ந்த ஆணவம் கொண்ட பிரகாஷ் ராஜ் திருந்தி வாழ்ந்தாரா? இல்லையா? என்பதுதான் 'விருமன்' படத்தின் கதை.

நாயகனாக நடித்துள்ள கார்த்தி..... கிராமத்து நையாண்டி, சென்டிமென்ட் ,காதல் , நடனம், நக்கலான வசனம் என அனைத்திலும் நடிப்பில் ஜொலிக்கிறார் .
படம் முழுவதும் அதிரடி ஆக்ரோஷமான ஆக்க்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார்.
நாயகியாக நடித்துள்ள அதிதி சங்கர் அமைதியான அழகில் அறிமுக நடிகையாக இல்லாமல் காதல் காட்சிகளில் நடனத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதை கவர்கிறார் !
ராஜ்கிரண், சூரி, வடிவுக்கரசி, ஆர்கே சுரேஷ், சரண்யா, இளவரசு, சிங்கம் புலி, மனோஜ், விஎம். சுந்தர், பாண்டியம்மா, அருந்ததி, மைனா, கருணாஸ், வையாபுரிஎன படத்தின் கதையோட்டத்திற்கு உதவியாக அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது .
ஊர் தாசில்தாராக ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத கேடு கெட்ட குணங்கள் அனைத்தும் உள்ள கதாபாத்திரத்தில்,,,, படம் பார்க்கும் ரசிகர்களே வெறுக்கும்படி தனித்துவமாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ் .
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தல் .
செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் கிராமத்து அழகை கண் முன்னே நிறுத்துகிறார் !

தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை , அண்ணன் தம்பி பாசம் , குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவம் என முழுக்க முழுக்க கிராமத்து மண் மணம் சார்ந்த கதை அமைப்புடன் , ஜீவனுள்ள வசனங்களுடன் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படமான 'விருமன்' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா.
ரேட்டிங் 3. 5 / 5