top of page

'எமோஜி’ இணையத் தொடர் - விமர்சனம் !


IT கம்பெனியில் வேலை பார்க்கும் மஹத் ராகவேந்திரா ஸ்போர்ட்ஸ் கடைக்கு கிரிக்கெட் பேட் வாங்குவதற்காக போகிறார்.

அங்கு சேல்ஸ் கேர்ளாக இருக்கும் மானசா சௌத்ரி மஹத் ராகவேந்திரா கேட்கும் பொருட்களை எடுத்து கொடுக்க ,,,,, மானசா சௌத்ரியின் அழகிலும் கட்டான உடலமைப்பிலும் மயங்கிய மஹத் ராகவேந்திரா,,,, மானசா சௌத்ரி மேல் காதல் வயப்படுகிறார்.

காதலை ஏற்று கொண்ட மானசா சௌத்ரி,,இருவரும் காதலிக்கலாம் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெளிவாக சொல்ல,,,, அதனை ஏற்றுக் கொள்ளும் மஹத் ராகவேந்திரா,, மானசா சௌத்ரியை காதலிக்கிறார் .

காதலிக்கும்போதே காதலுடன் சேர்ந்த காம களியாட்டத்தில் அடிக்கடி இருவரும் ஈடுபட,,, சில தினங்களுக்குப் பின் மானசா சௌத்ரிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க காதலர்களான இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.

மானசா சௌத்ரியை பிரிந்த மஹத் ராகவேந்திரா மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். மானசா சௌத்ரியும் மஹத் ராகவேந்திராவும் காதலர்களாக இருந்த நேரத்தில் எதிர் பிளாட்டில் உள்ள தேவிகா சதீஷ் இணைந்து வாழ்தல் முறையில்அவரது காதலனுடன் ஓருடல் ஈருயிராக வாழ்கிறார் .

தேவிகா சதீஷும் சுய நலமாய் உள்ள தன் காதலனின் போக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து மனஅழுத்தத்தில் இருக்கிறார் .

இந்நிலையில் தேவிகா சதீஷுன் விஷயமறிந்த மஹத் ராகவேந்திராஅவருடன் நட்பாக பழகி அழகான தேவிகா சதீஷ் மீது காதல் கொள்கிறார் .


இதற்கிடையில் இவர்களது பிளாட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகளின் திருமணத்திற்காக மஹத் ராகவேந்திராவும் தேவிகா சதீஷும் நண்பர்களுடன் ஒன்றாக ஊருக்கு செல்கின்றனர் .

ஊரில் நடக்கும் திருமண பார்ட்டியில் நண்பர்களுடன் கள்ளு குடித்து போதையாகும் தேவிகா சதீஷ்,, போதையில் உடன் இருக்கும் மஹத் ராகவேந்திராவுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்கிறார்,

பின்பு காதலர்களான இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள மகிழ்ச்சிகரமாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்ய இருவரும் முடிவு எடுத்து வக்கீலிடம் செல்கின்றனர் .

விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் நிலையில் குடும்ப கோர்ட்டில் இருவரும் கணவன் மனைவியாய் தீர்ப்பு தர உள்ள நீதிபதி எதிரே நிற்கின்றனர் .


என்ன காரணத்தினால் ஏன் இருவரும் பிரிந்தார்கள் ?


எதிர்பார்த்தபடி இருவருக்கும் விவாகரத்து கிடைத்ததா ? இல்லையா?


என்ற கேள்விக்கு விடை சொல்லும் தொடர் தான் ! இளசுகளை குஷிப்படுத்தும் ஜாலியான காம களியாட்ட 'எமோஜி’ இணையத் தொடரின் கதை.


நாயகனாக மஹத் ராகவேந்திரா ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் இயல்பாக நடிக்கிறார் .


நாயகிகளாக முதல் காதலியாக மானசா சௌத்ரி, அடுத்த காதலி தேவிகா சதீஷ்,,, கதைக்கேற்றபடி இருவரது நடிப்பும் சிறப்பாக இருந்தாலும்,,, அழகில் அம்சமான தேவிகா சதீஷ்,,,,,, காதலன் நிற்கும்போது தோளின் மேல் தன் காலை தூக்கி வைப்பது,,,,,திடீரென ஓடி வந்து நேராக இடுப்பில் ஏறி கொண்டு காதலனுக்கு முத்தமிடுவது .. என காதல் காட்சிகளில் வித்தியாசமாக தொடர் பார்க்கும் ரசிகர்களை ஏங்க வைக்கிறார் .



சனத் பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமையாகவும், காதல் படத்திற்கு ஏற்றபடி மென்மையான இசையாக பின்னணி இசையை அமைத்துள்ளார் .


ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில் இன்றைய ஐடி இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார் .


இக்காலத்தில் இளம் சமுதாயம் நடைமுறைப்படுத்தியுள்ள திருமண பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்தல்,,, பிடிக்கவில்லையென்றால் பிரிந்து கொள்ளுதல், காதலர்கள் காதலிக்கும்போதே காம உறவில் ஈடுபடுதல் , மனதார காதலித்து திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள் வாழ்க்கையில் புரிதல் இல்லையென்றால் உடனே விவாகரத்துக்கு கோர்ட்டுக்கு செல்வது என


சொல்ல வந்த கதையை அழகாக ,,,,, இளசுகளை குஷிப்படுத்தும்படியான கதையுடன் பயணிக்கும் இரட்டை அர்த்த வசனங்களுடன் ஐடி இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையை,,,, தெளிவான அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ,,,அனைவரும் ரசிக்கும்படியான தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் சென்.எஸ்.ரங்கசாமி.

ரேட்டிங் 3.5 / 5

bottom of page