‘டைரி’ - விமர்சனம்

ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு தேனிலவுக்காக வந்த புதுமண தம்பதியினர் இருவரும் கொள்ளையர்களால் கொல்லப்படுகின்றனர்.
காவல் துறையினரால் 16 ஆண்டுகளாக அந்த கொலைகளை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலையில்,,,,,
உயர் அதிகாரி உத்தரவின் பேரில் அந்த கொலை வழக்கை எஸ்.ஐ பயிற்சியை முடித்து விட்டு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கும் நாயகன் அருள்நிதி கையில் எடுக்கிறார்.
வழக்கை விசாரிக்கும் போது அதிர்ச்சி தரும் அனுமாஷ்ய திடுக்கிடும் சம்பவங்கள் அருள்நிதி கண்ணெதிரே நடைபெற,,,,,,,,,, இறுதியில் அருள்நிதி மர்மங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் திகிலான ‘டைரி’ படத்தின் கதை
திறமையாக சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, இந்த படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்க்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்திலும் கதைக்கு ஏற்ற நாயகனாக படம் முழுவதும் நடிப்பில் அசத்துகிறார் .
ஆரம்ப காட்சியில் ஒருவரை அடித்து நொறுக்கி உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகும் பவித்ராவின் நடிப்பு கதைக்கேற்றபடி சிறப்பு .
சாம்ஸ், ஷாரா ,கிஷோர் , ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம் ,சோனியா சுரேஷ் , செம்பி ,சேதுபதி ,ருத்ரா ,என நடிப்பில் இவர்களது பங்களிப்பு சிறப்பு
ரான் ஈத்தன் யோஹனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் படத்தின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை மிரட்டல் !
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
இதுவரை யாரும் பார்க்காத திகில் கலந்த க்ரைம் திரில்லர் கதையை மையமாக கொண்டு,,,,,,, சில காட்சிகளை தவிர படம் முழுவதும் காட்சிகள் பஸ்சிலேயே பயணிப்பதுடன் , எதிர்பாராத திருப்பங்களுடன்,,,, தெளிவான வேகமான திரைக்கதை அமைப்போடு,,,, ஒரே நேர்கோட்டில் சொல்ல வந்த கதையை சுவாரஸ்யமாக ஒரு திரில்லர் படத்தை பார்த்த உணர்வை படம் பார்க்கும் ரசிகர்கள் உணரும் விதமாக அனைவரும் பாராட்டும்படி மிக திறமையாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.
ரேட்டிங் : 3 . 50 / 5