top of page

'வெந்து தணிந்தது காடு' - விமர்சனம் !



நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் சிம்பு..... அனல் பறக்கும் வெயிலில் வயல் காட்டில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தால் முட்களால் காயம் சிம்புவுக்கு ஏற்படுகிறது .

இந்த விபத்தினால் நஷ்டமடைந்த ஒருவன் சிம்புவை மிரட்ட,,,, அவனை நினைத்து பயப்படும் அம்மா ராதிகா, உறவினர் பவா செல்லத்துரை மூலம் சிம்புவை வேறு வேலைக்கு அனுப்ப.... பவா செல்லத்துரை வீட்டுக்கு சிம்புவுடன் செல்கிறார் .


சிம்புவின் நிலையறிந்த பவா செல்லத்துரை மும்பையில் பரோட்டா கடையில் வேலை செய்ய ,,,, அதற்கான சிபாரிசு கடிதத்துடன் சிம்புவுக்கு கொடுத்து அனுப்பும் நிலையில்,,,,, மொபைல் போனில் வந்த மிரட்டலால் பவா செல்லத்துரை தற்கொலை செய்து கொள்ள, அவருடன் இருக்கும் சிம்பு, அவர் வேலை செய்யும் இடமான மும்பைக்கு செல்கிறார்.

அங்கு பரோட்டா கடையில் வேலை செய்யும் சிம்பு, கேங்ஸ்டர் கும்பலுடன் எதிர்பாராத விதமாக இணையும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதை .


படத்தின் நாயகனாக நடித்துள்ள சிம்பு ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான உடல் மொழியில் டீன்ஏஜ் பையனாக ஆரம்பத்தில் வெகுளித்தனமாகவும், சித்தி இதானியை காதலிக்கும் காட்சிகளில் இயல்பாகவும் கேங்ஸ்டர் தலைவனுடன் இணைந்தவுடன் அதிரடியான அடி ஆளாக ஆக்க்ஷன் நாயகனாக நடிப்பில் அசத்துகிறார்.


நாயகியாக சித்தி இதானி கதைக்கேற்றபடி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


சிம்புவுக்கு அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் , சித்திக் , நீரஜ் மாதவ் , பவா செல்லத்துரை, சாரா ,அப்புக்குட்டி, துளசி என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !!

குறிப்பாக தியேட்டரில் அனல் பறக்கும் விசிலில் படம் பார்ப்பவர்கள் அதிரும் படியான நடிப்பில் ஜாபர் சாதிக் மிரட்டுகிறார் !!


படத்தின் மற்றொரு நாயகனான ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அட்டகாசம் !! படத்தின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை!


சித்தார்தாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !


இரு கேங்ஸ்டர் கும்பலின் கதையை மையமாக கொண்டு,,, திரைக்கதையில் இயல்பான ரசிக்கும்படியான காதல் காட்சிகளுடன்,,, சிம்புவை மிக பெரிய கேங்ஸ்டர் தலைவனாக......... சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அதிரடியான ஆக்க்ஷன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் .


ரேட்டிங் 3.5 / 5



bottom of page