'சினம்' - விமர்சனம் !

ரெட் ஹில்ஸ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் அருண் விஜய் தன் குழந்தை மற்றும் காதல் மனைவி பால் லால்வானியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதே காவல் நிலையத்தில் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர் தனது உத்தரவை மீறி நேர்மையான காவல் அதிகாரியாக இருக்கும் அருண் விஜய் சில ரௌடிகளை பந்தாடுவதால் அருண் விஜய் மீது கடுங் கோபத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் பால் லால்வானி தன் தங்கையின் திருமணத்திற்காக மணமகன் வீட்டாரை பார்ப்பதற்காக தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலியல் வன் கொடுமையால் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்படுகிறார்.

கொலையான அருண் விஜய்யின் மனைவி பால் லால்வானி உடலுக்கு அருகில் மற்றொரு அடையாளம் தெரியாத ஆணின் உடல் இருப்பதால் அந்த வழக்கை 'கள்ளக் காதல்' வழக்காக பதிவு செய்கிறார் அருண் விஜய் மீது கோபத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர்,,,,, இதனால் ஆத்திரமடைந்த அருண் விஜய் அந்த இன்ஸ்பெக்டரை தாக்க இந்த தாக்குதலால் உயர் அதிகாரி உத்தரவின் பேரில் அருண் விஜய் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
வழக்கை மாற்றியமைத்து பதிவு செய்த இன்ஸ்பெக்டரின் சதியறிந்த உயர் அதிகாரி உத்தரவினால் மீண்டும் வேலைக்கு சேரும் அருண் விஜய் தன் மனைவின் கொலைக்கான காரணத்தையும் , கொலை செய்த மர்ம நபர்களையும் தேடி கண்டுபிடிக்கும் விசாரணையை தொடங்குகிறார் .
பால் லால்வானியை கொலை செய்த மர்ம நபர்கள் யார் ? அருண் விஜய் பிடியில் குற்றவாளிகள் சிக்கினார்களா ? சிக்கிய குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் 'சினம்'

கம்பிரமான உடற்கட்டுடன் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள அருண் விஜய் ,,,, கடமைமிக்க கண்ணியமான , நேர்மையான காவல் அதிகாரியாகவும் ,,,,,, காதல் காதல் காட்சிகளில் இயல்பாகவும், கொலை செய்யப்பட்ட மனைவியை பார்த்ததும் உணர்ச்சிமயமான சோக காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான அனுபவ நடிப்பால் அசத்துகிறார் .முடிவில் வரும் ஆக்ரோஷம் கலந்த அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளில் வெறித்தனமான அருண் விஜய்யின் நடிப்பு சூப்பர் !!
நாயகியாக பால் லால்வானி காதலியாகவும் குடும்ப பெண்ணாகவும் சிறப்பாக நடித்துள்ளார் .
காளி வெங்கட் , தமிழ் ,k s g .வெங்கடேஷ் , மனோகர் ,மறுமலர்ச்சி பாரதி என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !!
கதைக்கேற்றபடி ஷபீரின் இசை!!
நேர்மையான காவல் அதிகாரி அருண் விஜய் ,,,, எதிர்பாராமல் நடக்கும் அவரது மனைவியின் மர்ம கொலை ! அருண் விஜய்யின் விசாரணையில் சிக்கும் குற்றவாளிகளுக்கு அவர் கொடுக்கும் தண்டனை என்ன! இக் கதையை மையமாக கொண்டு சில காட்சிகளில் திரைக்கதையில் வேக தடை இருந்தாலும் ,,,படத்தின் இறுதியில் ராக்கெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதையில் படம் பார்க்கும் ரசிகர்களே எதிர்பார்க்கும் அனல் பறக்கும் அதிரடியான க்ளைமாஸ்க்குடன் அனைவரும் பார்க்கும் தரமான படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜி. என். ஆர் குமரவேலன் .
ரேட்டிங் : 3.5 / 5