'சிவகுமாரின் சபதம்' விமர்சனம்

இளங்கோ குமணன் பாரம்பரியமாக காஞ்சிபுரத்தில் நெசவு தொழில் செய்து வருகிறார்.
இளங்கோ குமணனிடம் வேலை பார்த்த சந்திரசேகர் அவரை ஏமாற்றி துணிக்கடை வியாபாரம் செய்ய ,
பின்னாளில் பெரிய அளவில் தொழில் அதிபர் ஆகிறார் .
இந்நிலையில் இளங்கோ குமணனின் மகன் ராகுல், சந்திரசேகர் மகளை காதலித்து வீட்டோடு மருமகனாக ,
ராகுல் காஞ்சிபுரத்தில் உள்ள ஹிப் ஹாப் ஆதியையும் , அவரது நண்பன் கதிரையும் அழைத்து சென்று சந்திரசேகரிடம் வேலைக்கு சேர்க்கிறார் .
தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாதுரி ,சந்திரசேகர் வீட்டில் பார்க்கும் ஹிப் ஹாப் ஆதி ,மாதுரியை மனதார காதலிப்பதாக கூற , முதலில் காதலை ஏற்க மறுக்கும் மாதுரி ஒரு பார்ட்டியில் நடக்கும் பிரச்சனையில் தனக்கு உதவி செய்த ஹிப் ஹாப் ஆதியை காதலிக்கிறார் .
இவர்களது காதலால் வரும் பிரச்சனையில் சந்திரசேகர், ராகுலையும் ,ஹிப் ஹாப் ஆதியையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல , இதனால் கொதிப்படைந்த ஹிப் ஹாப் ஆதி சந்திரசேகரிடம் சபதம் போடுகிறார் !!
இந்த சபதத்தில் ஹிப் ஹாப் ஆதி வெற்றியடைந்தாரா ? இல்லையா ? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் 'சிவகுமாரின் சபதம்'
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு ,இயக்கம் மற்றும் நாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி. படம் முழுவதும் வழக்கமான ஜாலித்தனம் கொண்ட நடிப்பு ! இளைஞர்களுக்கு இவரது இசையில் பாடல்கள் கொண்டாட்டம் .
நாயகியாக மாதுரி கதைக்கேற்றபடி சிறப்பாக நடிக்கிறார்.
தாத்தாவாக நடிக்கும் இளங்கோ குமணன், விஜய் கார்த்திக், பிராங்க் ராகுல்,ஆதித்யா கதிர் ,ரஞ்சனா நாஞ்சியார் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
காஞ்சிபுரத்தில் நெசவு தொழில் கதைக்களத்தை மையமாக கொண்டு அழுத்தமான திரைக்கதை அமைப்புடன் , விலையுயர்ந்த ராஜ பட்டு புடவை தொடர்பான காட்சிகளுடன் ,குடும்ப பாசம் ,காதல் ,காமெடி என ஜனரஞ்சகமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஹிப்ஹாப் ஆதி.