'ட்ராமா' - விமர்சனம் !

கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக புதிதாக பதவி ஏற்கிறார் ஜெய்பாலா. அவருடன் அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஐந்து ஆண் காவலர்கள் இருக்கிறார்கள். அதில் போலீஸ் ஏட்டாக சார்லி இருக்கிறார்.
காவல் நிலைய சிறைக்குள் கைதி ஒருவர் இருக்கும்
நிலையில் காவல் நிலைய எலக்ட்ரிகல் மின்சார பழுது பார்க்க இரண்டு பேர் வருகிறார்கள். சில நேரத்திற்கு பிறகு காதல் ஜோடி ஒன்று பாதுகாப்புக்காக தஞ்சம் கேட்டு காவல் நிலையத்திற்குள்வருகிறார்கள் .
இந்நேரத்தில் ஜெய்பாலாவின் காதலியான காவ்யா பாலுவின் பிறந்தநாள் தினத்தை சக காவலர்கள் அந்த காவல் நிலையத்தில் கொண்டாடுகின்றனர். எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட,,,,
விளக்கில்லாத அந்த இருளில் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் ஏட்டு சார்லியை யாரோ கொலை செய்துவிடுகின்றனர்.
சார்லியின் கொலைக்கான பின்னணி என்ன ? கொலை செய்தது யார் ?என்பதை கண்டுபிடித்து கைது செய்ய உயர் அதிகாரி கிஷோர் வருகிறார்.
இந்த கொலையை செய்த உண்மையான குற்றவாளி யார் ?
இந்த கொலைக்கான காரணம் என்ன? இறுதியில் சாமர்த்தியமாக கிஷோர் குற்றவாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா?
என்பதை சொல்லும் படம்தான் 'ட்ராமா'
படத்தில் நடித்துள்ள உயர் அதிகாரி வரும் கிஷோரும் ஏட்டாக வரும் சார்லியை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். முன் பாதி முழுவதும் பொறுமையை சோதிக்கும்படியான தேவையில்லாத அவசர கோலத்தில் எடுத்த காட்சிகள்,,,,, படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவரும் பேசும் வசனங்களில் அவசரம் ! காட்சிகளில் எதார்த்தம் இல்லை.
சார்லியை கொலை செய்த பின்பு கிஷோர் வந்த பிறகுதான் திரைக்கதையுடன் கதையின் வேகம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது .
கிஷோரும், சார்லியும் அனுபவ நடிப்பால் இயல்பாக நடிக்கின்றனர் ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு என இவர்கள் அனைவரும் நடிப்பில் புதுமுகங்கள் என்பதனை நிரூபிக்கிறார்கள் !
ஷினோஸ் ஒளிப்பதிவும் . பிஜிபால் இசையும் கதைக்கு பக்க பலம் !
ஒரே நாளில் காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால் முதல் பாதி முழுவதும் காவலர்களுக்குள் நடக்கும் பேச்சுக்கள் ,சண்டை ,வாய் தகராறு என படத்தில் காட்சிகளின் நீளம் என குறைகள் இருந்தாலும்,,,,, இடைவேளைக்கு பின் வரும் திரைக்கதையின் வேகத்தினால் யாரும் யூகிக்க முடியாத க்ளைமாஸ்க்குடன் சொல்ல வந்த கதையை அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் அஜூ கிழுமலா.
ரேட்டிங் : 2.5 / 5