‘பொன்னியின் செல்வன்' பாகம் 1-விமர்சனம் ! தமிழின வரலாற்றின் பிரம்மாண்டம் !!

தஞ்சை மண்ணை ஆளும் சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசரான சுந்தர சோழனுக்கு ஆதித்ய கரிகாலன் , அருண்மொழி வர்மன் என்ற இரண்டு மகன்களும் குந்தவை என்ற ஒரு மகளும் உள்ளனர்.
சோழ நாட்டிற்காக ராஷ்டிர நாட்டில் வல்லவராயன் வந்திய தேவனுடன் இணைந்து போரிடும் ஆதித்ய கரிகாலன் எதிரி நாடுகளை கைப்பற்றி அங்கு சோழ கொடியை பறக்க விடுகிறார் , மற்றொரு மகனான அருண்மொழி வர்மன் தந்தை சுந்தர சோழன் கட்டளைபடி,,,, சோழ மண்ணுக்காக இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்று இலங்கையில் சோழ கொடியை பறக்க விடுகிறார்.
சோழ படையில் இருக்கும் பெரிய பழு வேட்டரையரால் தன் தந்தையான சுந்தர சோழனின் சாம்ராஜ்ஜியத்தில் சூழ்ச்சியினால் பிரச்சனை வர இருப்பதை அறிந்து கொண்ட ஆதித்ய கரிகாலன்,,,,, கடம்பூர் சென்று அங்கு நடப்பதை தெரிந்து கொண்டு அந்த செய்தியை அவருடைய தந்தைக்கு தெரியப்படுத்த வல்லவராயன் வந்திய தேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
ஆதித்ய கரிகாலன் ஆணையை ஏற்று கடம்பூர் செல்லும் வந்திய தேவன் பெரிய பழுவேட்டைரையர் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகனை முடி சூட்டி அரசராக்க சூழ்ச்சி செய்வதை கண்டுபிடிக்கிறார்.
யாருக்கும் தெரியாமல் பல வீரர்களை கடந்து சுந்தர சோழனுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி சின்ன பழுவேட்டையரையரின் சதியிலிருந்து தப்பிக்கும் நேரத்தில் வந்தியதேவன்,,,,,,,, பெரிய பழுவேட்டையரையரின் மனைவியான நந்தினியை சந்திக்கிறார். வந்தியதேவன் வந்திருக்கும் நோக்கத்தை புரிந்துக் கொண்ட நந்தினி இதனை பெரிய பழுவேட்டைரையரிடம் தெரியப்படுத்துகிறார். மறு புறம் சோழர்களிடம் தோல்வியடைந்த பாண்டியர்கள் மூலம் அருண்மொழி வர்மனை கொல்லவும் சதி செய்கிறார்
இந்நிலையில் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகனை முடி சூட்டி அரசராக்க பெரிய பழுவேட்டையரையர் சூழ்ச்சி செய்வதை வந்தியதேவன் இளவரசி குந்தவையிடம் சொல்ல, அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு அழைத்துவர வந்திய தேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் இளவரசி குந்தவை.
அதற்கு முன் பெரிய பழுவேட்டையரையரும் சாமர்த்தியமாக சுந்தர சோழரின் உத்தரவின் மூலம் அருண்மொழியை அழைத்து வர ஒரு படையை ஏற்பாடு செய்கிறார்.
அருண்மொழி வர்மனை இளவரசி குந்தவையின் ஆணைப்படி தஞ்சைக்கு வந்திய தேவன்அழைத்து வந்தாரா?
தனது சகோதரர்களை தஞ்சைக்கு வரவைத்து பெரிய பழுவேட்டையரையர் போடும் சூழ்ச்சிகளை முறியடித்து தஞ்சை நாட்டின் சாம்ராஜ்ஜியத்தை இளவரசி குந்தவை காப்பாற்றினாரா ? இல்லையா ?
என்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம்தான் ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வல்லவராயன் வந்தியத் தேவனாக வரும் கார்த்தி ,அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, நந்தினியாக தோன்றும் ஐஸ்வர்யா ராய், இளவரசி குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா, பெரிய பழுவேட்டைரையராக நடித்திருக்கும் சரத்குமார், சின்ன பழுவேட்டையராக நடித்திருக்கும் பார்த்திபன், சுந்தர சோழராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ,பாண்டிய ரவி தாசனாக கிஷோர் ,பூங்குழலியாக ஐஸ்வர்ய லக்ஷ்மி ,வானதியாக சோபியா ,மதுராந்தகனாக ரஹ்மான் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் ,பார்த்திபேந்திரன் பல்லவனாக விக்ரம் பிரபு ,பெரிய வேளார் பிரபு ,மலையமான் லால் என படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடிப்பில் தங்கள் கதாபாத்திரமாகவே வாழ்கின்றனர் .
அழகு இருக்கும் இடம்தான் ஆபத்து என்பதற்கேற்ப சதி திட்டம் தீட்டுவதில் அமைதியான நடிப்பில் ஐஸ்வர்யாராயும்,,,,,
பெரிய பழுவேட்டைரையரின் சூழ்ச்சியையும் சதிகளையும் சாமர்த்தியமாக முறியடிப்பதில் கில்லாடியாக திரிஷாவும்,,,,, பேரழகிகளாக அழகு தேவதைகளாக அழகில் படம் முழுவதும் ஜொலிக்கின்றனர்.
பொன்னியின் செல்வனாக நடித்துள்ள ஜெயம் ரவி கம்பிரமான உடற்கட்டுடன் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் தஞ்சை ராஜ்ஜியத்தின் இளவரசனாக நடிப்பில் நிரூபிக்கிறார்.
ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தோல்வியடைந்த தன் காதலை பற்றி வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அதிரடியான ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகளிலும் அனுபவ நடிப்பால் நடிப்பில் முத்திரை பதிக்கிறார் !
பெண்களை ரசிப்பதிலும் , பெண்களின் அழகை வர்ணிப்பதிலும் ரசிகர்களே ரசிக்கும்படியான நடிப்பில் வல்லவராயன் வந்திய தேவனாக வரும் ஜாலியான கார்த்தி !!
ரவிவர்மனின் ஒளிப்பதிவில் கதைக்கு ஏற்றபடி காட்சிகளில் பிரம்மாண்டம் !

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ! பின்னணி இசையை படம் முழுவதும் காட்சிகளில் இசை சிற்பியாய் செதுக்கியுள்ளார் !
கலை பணியை பார்த்த தோட்டா தரணியும் ,எடிட்டிங் பணி செய்த ஸ்ரீகர் பிரசாத்தும் படத்திற்கு பக்க பலமாய் அமைந்த தூண்கள் !
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு தெளிவான அழுத்தமான திரைக்கதை அமைப்புடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான சரித்திர படத்திற்குரிய பிரம்மாண்டமான
காட்சிகளுடன் விக்ரம் ,ஜெயம் ரவி , கார்த்தி என மூவரது ரசிகர்களும் குதூகலமாக கொண்டாடும்படி அனைவரும் பாராட்டும் சிறந்த படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
தமிழ் இனத்தின் பெருமையை பறை சாற்றும் விதத்தில்,,,, பிரம்மாண்டத்தின் அடையாளமாய்,,,, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் 'பான் இந்தியா' படமாக "பொன்னியின் செல்வன்" பாகம் 1 'உருவானதற்கு 'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ' சுபாஷ்கரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !
ரேட்டிங் : 4.5 / 5