'நானே வருவேன்' - விமர்சனம் ! 'அனுபவம் புதுமை' ரசிகர்களுக்கு !

இரட்டை பிறவிகளான தனுஷ் சகோதரர்களில் அண்ணன் தனுஷ் கொடூர குணம் கொண்ட கெட்டவன், தம்பி தனுஷ் பொறுமை குணம் கொண்ட சாந்தமான நல்லவன்.
அண்ணன் தனுஷ் சிறிய வயதில் அப்பாவையே கொலை செய்யும் அளவுக்கு மிருக குணம் கொண்டவனாக இருந்ததால் , அவனை தனியாக விட்டு பிரிந்து தம்பி தனுஷுடன் அவருடைய அம்மா சென்றுவிடுகிறார் .
சில வருடங்களுக்கு பின் தம்பி தனுஷ் வளர்ந்து பெரியவனாக மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நேரத்தில் பள்ளியில் படிக்கும் மகளிடம் அமானுஷ்ய சக்தி பேச ஆரம்பிக்கிறது .
தனுஷின் மகளும் அதனுடன் பேசுகிறார்,,, இதை கண்டறியும் தனுஷ், மகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அதற்குள் அந்த அமானுஷ்ய சக்தி மகள் உடலுக்குள் புகுந்து தம்பி தனுஷிடம் அண்ணன் தனுஷை கொலை செய்ய தூண்டுகிறது.
தனுஷின் மகளின் உடலில் புகுந்து மிரட்டும் அந்த அமானுஷ்ய சக்தி யார்?
அண்ணன் தனுஷை அமானுஷ்ய சக்தி கொலை செய்ய சொல்வதற்கான காரணம் என்ன?
முடிவில் தனுஷ், அண்ணன் தனுஷை கொலை செய்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'நானே வருவேன்'
இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்,,,, தம்பி கதாபாத்திரத்தில் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாத ,,,,,மகள் மீது பாசத்துடன் இருப்பது,,, மகளின் உடலில் அமானுஷ்ய சக்தி புகுந்து மிரட்டும்போது,,,, மகளை காப்பாற்ற போராடுவது என பொறுப்புள்ள தந்தையாகயாகவும்,,,,
அண்ணன் கதாபாத்திரத்தில் கொடூர குணம் கொண்ட மிரட்டலான நடிப்புடன் நல்லவன் கெட்டவன் என இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசத்துடன் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இரண்டு பேரும் வெவ்வேறு ஆட்கள் என நினைக்குமளவில் நடிப்பில் அசுரத்தனமான நடிகன் என்பதை மிரட்டலாய் நிரூபிக்கிறார்.
இரு தனுஷின் மனைவிகளாக இந்துஜா, எல்லி அர்வம் கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் !
தனுஷின் மகளாக நடித்துள்ள சிறுமி ஹியா தவே நடிப்பில் அசத்தல் !
பிரணவ் - பிரபவ் ,,,,,ஃபிராங்க்கிங்ஸ்டன் - சில்வென்ஸ்டன்,,,,, என இரட்டை சகோதர்களாக நடித்திருக்கும் இரட்டையர்களின் நடிப்பும் இயல்பாக உள்ளது !
சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார், ஒரு காட்சியில் வரும் இயக்குநர் செல்வராகவன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
யுவன் சங்கர் ராஜா இசையில் ரசிக்கும்படியான பாடல்கள் கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை!
இது வரை தனுஷ் நடிக்காத வித்தியாசமான கதையை கொண்டு அப்பா மகன் பாசம் ,,,,,,அப்பா மகள் பாசம், அண்ணன் தம்பி பாசம் என தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் ஆரம்பத்தில் பயமுறுத்தும் திரில்லராகவும் இடைவேளைக்கு பின் மிரட்டலான ஆக்க்ஷனாகவும் புது அனுபவமாக,,,,,,, நடிப்பில் இரு வித கெட் அப் களில் தனுஷை ரசிகர்கள் ரசிக்குமளவில் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வராகவன் .
ரேட்டிங் : 3.5 / 5