top of page

‘பிஸ்தா’ - விமர்சனம் !


மெட்ரோ சிரிஷ் திருமணம் நிச்சயித்த மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து அந்த பெண்ணை மீட்டு அவரது காதலனுடன் சேர்த்து வைக்கும் வேலையை ஒரு தொழில்நிறுவனமாக யோகி பாபுவுடன் சேர்ந்து நடத்துகிறார் .

இதனால் பெண்ணை பெற்றவர்கள் சிரிஷுக்கு சாபம் விடுகின்றனர்.    ஒருநாள் தெருவில் நாடகம் நடத்தும் நாயகி மிருதுளா வை பார்த்து அவள் மீது சிரிஷ் காதல்கொள்ள மிருதுலாவும் சிரிஷை காதலிக்கிறார்


இந்நிலையில் மணப்பெண்களை கடத்தும் சிரிஷுடம்,,,, பெண்ணை பெற்றவர்களின் சாபம் உனக்கு வேண்டாம் அந்த வேலையை இனி செய்யாமல் வேறு வேலை செய்தால்தான் நான் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என மிருதுளா உறுதியாக சொல்லி விட , நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க  இறுதியாக  மணப்பெண்ணை கடத்தும் வேலையில்  ஈடுபடும் சிரிஷ் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.முடிவில்  மெட்ரோ சிரிஷ் - மிருதுளா திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் ‘பிஸ்தா’ படத்தின் கதை.


துடிதுடிப்புள்ள இளைஞராக வரும் நாயகன் சிரிஷ், அழகான அமைதியான  நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திருமண விஷயத்தில் சிரிஷ் எடுக்கும் இறுதி முடிவு இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை!!


நாயகியாக நடித்திருக்கும் மிருதுளாமுரளி, கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .


நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அருந்ததி நாயர் அழகாக இருக்கிறார். அருந்ததி நாயரின் அழகிற்கு விடை படத்தின் இறுதி காட்சியில்  தெரிகிறது .


சதீஷ், யோகி பாபு, செந்தில் என பல காமெடி நடிகர் படத்தில் இடம் பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. சில இடங்களில் நன்றாக சிரிக்க  வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.


தரண் குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம்   பின்னணி இசை கதைக்கேற்றபடி பயணித்துள்ளது.


எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.


மண பெண்ணுக்கு பிடிக்காத திருமணங்களைத் தடுத்து நிறுத்தி அந்த பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்கும் தொழிலை நாயகன் நடத்துவதாக ஒரு புதிய கதையுடன் சில காட்சிகளில் திரைக்கதையில் வேக தடை இருந்தாலும் சொல்ல வந்த கதையை ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் ரமேஷ் பாரதி


ரேட்டிங் ; 3 / 5

bottom of page