top of page

'காந்தாரா' - விமர்சனம்



1847ஆம் ஆண்டில் கன்னட நாட்டை ஆண்ட மன்னருக்கு எல்லா வசதிகள் இருந்தும் அம்மாவின் அன்புக்காகவும் ,மாமனின் ஞானத்திற்காகவும் ஏங்கி நிம்மதி இன்றி வாழ்கிறார் . நிம்மதியை தேடி பல குருமார்களை சந்திக்கிறார்.


குருமார்களின் உத்தரவுப்படி காட்டுப் பகுதியில் காவல் தெய்வமாக திகழும் பஞ்சுருலி தெய்வ கற்சிலையை பார்த்தவுடன் நிம்மதி சந்தோஷம் அடைகிறார்.

கிராம மக்கள் தெய்வமாக வணங்கும் அந்தக் கற்சிலையை தனக்குத் தரும்படி கிராம மக்களிடம் கேட்கும் நேரத்தில் . சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்துவாசி சத்தமாகக் கத்தி, அவர் கத்தும் ஒலி ஓசை கேட்டது வரையிலான அரசரின் நிலங்களை கிராமத்து மக்களுக்குத் தந்தால் கற்சிலையை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார் சாமியாடி.


அரசரும் அதற்கு சம்மதித்து அந்த கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான நிலங்களைத் தந்து கற்சிலை கடவுளை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.


பல வருடங்களுக்குப் பிறகு 1970ல் அவரது அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்

தனது மூத்தோர் அளித்த நிலத்தை திரும்ப கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார். அவர் கோர்ட்டு வாசலிலேயே ரத்தம் கக்கி உயிரை விடுகிறார்.


அவரின் வாரிசு ஊர் பண்ணையார் அம்மலை வாழ் மக்களுக்கு நல்லது செய்வது போல் நடித்து பூர்விக நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார் .


ஒரு கட்டத்தில் பண்ணையாரின் திட்டம் பற்றி அறிந்து கொண்டு நாயகன் ரிஷப் ஷெட்டி, தனது மலை வாழ் கிராம மக்களையும்,மக்களின் நிலங்களையும் காப்பாற்ற முயற்சிக்கிறார்.


இறுதியில் ரிஷப் ஷெட்டி பண்ணையாரிடம் இருந்து மக்களையும், நிலத்தையும் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதுதான் 'காந்தாரா' படத்தின் கதை.


நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி. வீர விளையாட்டான எருமைப்போட்டிகளில் கலந்துகொண்டும் வனத்தில் பன்றிகளை வேட்டையாடிக்கொண்டும் நண்பர்களோடு மதுக்குடித்துக் கொண்டும் கம்பிரமான ஹீரோவாக சுற்றித் திரிகிறார்.

நிலத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் அனைவரையும் மிரள வைக்கிறார். யாருமே யூகிக்க முடியாத க்ளைமாஸ்க் காட்சியான முடிவில் காவல் தெய்வமாக மாறி வில்லனை வதம் செய்யும் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் உக்கிரமான ஆக்ரோஷ நடிப்பினால் படம் பார்க்கும் ரசிகர்களே மெய் சிலிர்க்கின்றனர் .


வனத்துறை அதிகாரியாக வரும் கிஷோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்க பலம் ! .

ஒரு கிராமத்து பழங்குடியினப் பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சப்தமி கவுடா இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பண்ணையாராக வரும் வில்லன் அச்சுயுத் குமார் மற்றும் நாயகனோடு இணைந்து நடித்தவர்கள் பங்களிப்பு நடிப்பில் சிறப்பு !


அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை !


ஒளிப்பதிவாளர் அரவிந்தின் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் பழங்குடியினரின் சூழலையும் காடுகளின் காட்சிகளையும் ,காவல் தெய்வம் தோன்றும் காட்சிகளிலும் யதார்த்தமான மிரட்டல் !


கர்நாடக காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் காவல் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து தன் இன மலை வாழ் மக்களின் நிலங்களை போராடும் நாயகனின் கதையில் இக் கால இளைஞர்களும் பிரமிக்கும் வகையில் காவல் குல தெய்வ வழிபாட்டை கதையுடன் பயணித்து தெளிவான வேகமான திரைக்கதை அமைப்புடன் ,,,,,, காவல் தெய்வம் எழுப்பும் உன்னத ஓலி ஓசையுடன் முடிவில் படம் பார்க்கும் ரசிகர்களே மிரளும்படி அமைந்த மிரட்டலான காட்சிகளுடன் நாயகனாக நடித்ததுடன் அனைவரும் பாராட்டும் விதத்தில் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.


ரேட்டிங் ; 4 . / 5

.


bottom of page