top of page

‘சஞ்ஜீவன்’ - விமர்சனம்!


ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்த வீரராக இருக்கும் வினோத் லோகிதாஸ்

ஐ  டி  நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் .


இவருடன் சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.


அதே நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு சேரும் நாயகி திவ்யாவை பார்த்ததும்  நாயகன் - நாயகி இருவருக்கும் முதல் பார்வையிலே காதல் மலர்கிறது.


இந்நிலையில் வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் இறுதி போட்டியில் பங்கேற்று இறுதி வரை சென்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நண்பர்கள் அனைவரும் சுற்றுலா தலமான ஏற்காடு செல்கிறார்கள்.


அப்போது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்குகிறது.

இறுதியில் அங்கு என்ன நடந்தது நண்பர்கள்  உயிருடன் தப்பித்தார்களா?, இல்லையா? என்பதுதான் ‘சஞ்ஜீவன்’. படத்தின் கதை.


நாயகனாக நடிக்கும்  வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர்  விளையாட்டுக்காக 6 மாதம் பயிற்சி எடுத்து ஸ்னூக்கர்  விளையாட்டு வீரராக ஈடுபாட்டுடன் நடித்து அவரது நடிப்பு திறமையை அவர் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது


அமைதியான அழகில் நாயகியாக திவ்யா துரைசாமி கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் ! 


படம் முழுவதும் நண்பர்களாக வரும் சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் மற்றும் ஸ்ரீதர் நாராயணன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


அமைதியான அழகில் நாயகியாக திவ்யா துரைசாமி கதைக்கேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் ! 


இசையமைப்பாளர் தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்


இயக்குனருக்கு பக்க துணையாக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவு!


ஸ்னுக்கர் விளையாட்டை மையப்படுத்திய கதையில் இளைஞர்கள் ரசிக்கும் விதத்தில் 5  நண்பர்களின் வாழ்க்கையையும், சொல்ல வந்த கதையை அழுத்தமான திரைக்கதையில் குடியால் ஏற்படும் பாதிப்புகளை சொல்வதோடு முதல் படத்திலேயே அனுபவ இயக்குனரை போல் மிக திறமையாக அனைவரும் ரசிக்கும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணி சேகர்.


ரேட்டிங் : 3.5 / 5. 

bottom of page