'சர்தார் ' - விமர்சனம் !
Updated: Oct 22, 2022

இந்திய உளவுத் துறையின் ராணுவ உளவாளியாக குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் செயல்படும் கார்த்தி (சர்தார் ) நாட்டிற்காக நேர்மையான உளவாளியாக தன் பணியை செய்யும் நேரத்தில் இந்திய உளவுத் துறையின் உயர் அதிகாரியான சங்கி பாண்டேவால் இந்திய நாட்டின் தேசத்துரோகி என பழி சுமத்தப்படுகிறார்.
கார்த்தி (சர்தார் ) மீது விழுந்த பழியால் கார்த்தியின் மனைவி ரஜிஷா விஜயன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தப்பிக்கும் சிறுவனான கார்த்தி (சர்தார் மகன் ) மட்டும் சித்தப்பா முனிஷ் காந்தின் ஆதரவில் வளர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜய் பிரகாஷாக (கார்த்தி) தன் வேலையை செய்கிறார்.
தேசத்துரோகி என பழி சுமத்தப்பட்ட தன் தந்தை என்ன ஆனார் .உயிருடன் இருக்கிறாரா ?இல்லையா? என்பது தெரியாத நிலையில்,,,,, நாலு பேருக்கு நாம செய்யற நல்லத நாற்பதாயிரம் பேர் பார்க்கணும் என்கிற அடிப்படையில் காட்சி ஊடகங்களில் பிரபலமடைந்து தன் வேலையை சிறப்பாக செய்யும் இன்ஸ்பெக்டரான கார்த்தியை,,,, உயர் அதிகாரிகள் பாராட்டாமல் என்னதான் சிறப்பாக வேலை செய்தாலும் இந்திய நாட்டின் தேசத்துரோகியின் மகன்தான் என கூற கடுப்பாகிறார் கார்த்தி.

இதற்கிடையில் ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார் தனியார் நிறுவன முதலாளியான முன்னாள் இந்திய உளவுத் துறையின் உயர் அதிகாரி சங்கி பாண்டே!
மற்றொரு பக்கம் தண்ணீரை வியாபாரமாக்கியதால் அதனால் ஏற்படும் விளைவினால் உடல் நலப் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தன் மகன் ரித்விக்கை போல மற்ற குழந்தைகள் உடல் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் நிறுவன முதலாளிகளை எதிர்த்து போராடுகிறார் லைலா.
இந்நேரத்தில் சங்கி பாண்டேவின் ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ திட்டத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற மீண்டும் கார்த்தி (சர்தார் ) வர வேண்டும் என அவினாஷும் யுகி சேதுவும் கணிக்க,,, அவர்களுக்கு சாதகமாக ராஜாஜி பவன் முன் நடத்தும் போராட்டத்தின்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண யாருக்கும் தெரியாமல் ராஜாஜி பவனில் இருக்கும் மிக முக்கியமான ஒரு கோப்புகளை எடுக்க முயற்சிக்கிறார் லைலா .

விஷயமறிந்த காவல் துறை லைலா மீது தேசத்துரோகி என பட்டம் சுமத்தி அவரை தேடும் நேரத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கடற்கரையில் பிணமாக கிடக்கிறார் லைலா.
லைலாவை கொலை செய்த மர்ம நபர்கள் யார் ?
இந்திய நாட்டின் தேசத்துரோகி என பழி சுமத்தப்பட்ட கார்த்தி (சர்தார் ) எந்த நாட்டில் ! என்ன ? நிலையில் இருந்தார்
சங்கி பாண்டேவின் ONE INDIA.. ONE PIPELINE.. ‘ஒரே நாடு, ஒரே குழாய்’ தண்ணீர் வியாபார திட்டத்தை முறியடித்து,,,, நாட்டு மக்களை கார்த்தி (சர்தார் ) காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் 'சர்தார்' படத்தின் கதை !
நாயகனாக நடித்துள்ள கார்த்தி துடிதுடிப்புள்ள இளைஞனான இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷாகவும் ,இந்திய உளவுத் துறையின் ராணுவ உளவாளியாக தேச பற்றுள்ள வயதான சர்தாராகவும்,,,, தந்தை -மகனாக இரு வேடங்களில் இரு கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்தி மிக சிறப்பாக நடித்துள்ளார் .
குறிப்பாக ரசிகர்களின் விசில் பறக்கும் ஆரவாரத்துடன் 'சர்தார்' அறிமுகமாகும் காட்சி அதிரடி ஆக்க்ஷனில் தியேட்டரில் அனல் தெறிக்கிறது !

நாயகிகளாக நடித்துள்ள ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்கும் லைலா ,மாஸ்டர் ரித்விக், முனிஷ் காந்த் ,யூகி சேது ,அவினாஷ் , யோக் ஜெய்பீ, பாலாஜி சக்திவேல் ,இளவரசு ,சுவாமிநாதன் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
வில்லனாக அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத சங்கி பாண்டே நடிப்பில் மிரட்டல் !
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களை விட ,திரைக்கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசை அசத்தல் !!
ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !
சிறப்பான எடிட்டிங்கில் ரூபன் இயக்குனருக்கு பக்க துணை !
கலை இயக்குனர் கதிரின் தனித்துவமான கை வண்ணம் !
அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பராயன் கதைக்கு கூடுதல் பலம் !
நாட்டில் நடக்கும் சமூக அவல பிரச்சனையான தண்ணீர் வியாபாரத்தை முறியடித்து மக்களை காப்பாற்றும் நாயகனின் கதையை மையமாக கொண்டு,,,,
தண்ணீர் வியாபாரத்தை சாமானிய மக்களுக்கு புரியும் வகையில்
சொல்ல வந்த கதையை விழிப்புணர்வான காட்சிகளுடன்,,,,, தெளிவான வேகமான திரைக்கதை அமைப்புடன் ,,,,, கார்த்தி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விறு விறுப்பான இந்தியன் ஸ்பை திரில்லர் அதிரடி ஆக்க்ஷன் படமாக அனைவரது பாராட்டுக்களுடன் இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.
ரேட்டிங் : 4.5 / 5