‘படவெட்டு’ - விமர்சனம் !

கேரளாவில் மலை பிரதேசத்தில் வட மலபாரில் உள்ள மாலூர் கிராமத்தில், விவசாயம் செய்து பிழைத்து கொண்டிருக்கும் மக்களுக்கு அரசியல் கட்சி தலைவரான ஷம்மி திலகனின் கட்சி நிர்வாகிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் நிவின் பாலி வேலை இல்லாமல் மாடு வளர்த்து பாலை விற்று வரும் வருமானத்தில் மழை பெய்தால் ஒழுகும் வீட்டில் தன் அத்தை ரம்யா சுரேஷ் ஆதரவில் வாழ்கிறார்.
மழை பெய்தால் ஒழுகும் பழைய வீடான நிவின் பாலியின் வீட்டை பயன்படுத்தி தனது கட்சியின் சேவைத் திட்டத்தின் அடிப்படையில் சுயநல நோக்கங்களுக்காக வீட்டைப் புதுப்பித்து வெளியில் கட்சியின் சார்பில் கல்வெட்டையும் நடுகிறார் கட்சி தலைவரான ஷம்மி திலகன்.
மேலும் கிராமத்தை தன் வசமாக்கி ,,, பாமர மக்களுக்கு தன் கட்சியின் மூலம் இலவச திட்டங்களை அறிவித்து அவர்களது விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார்.
அரசியல் சதிகார ஷம்மி திலகனின் திட்டங்களை இறுதியில் நிவின் பாலி முறியடித்தாரா ?
கிராம மக்களையும் ,மக்களின் நிலங்களையும் நிவின் பாலி காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் ‘படவெட்டு’ படத்தின் கதை
கதையின் நாயகனாக நிவின் பாலி விபத்தினால் தன் கனவை தொலைத்த தடகள வீரராக அமைதியான மனோபாவத்தில் நடிப்பில் இயல்பாக நடித்திருக்கிறார் .
முடிவில் ஷம்மி திலகனுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் ஆக்ரோஷமாக,,,, திரு விழாவில் ஏற்படும் தகராறில் சேற்றில் நடைபெறும் சண்டைக்காட்சிகளில் அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக,,,,, அழுத்தமான நடிப்பில் ஜொலிக்கிறார்.
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நாயகியாக அதிதி பாலன் கண்களிலேயே ஒட்டு மொத்த காதலையும் வெளிப்படுத்தும் நடிப்பாற்றலில் எதார்த்தம் !
குய்யாலி என்ற கதாபாத்திரத்தில் கட்சியின் தலைவனாக,,,,, வில்லனாக இயல்பான நடிப்பில் நடித்திருக்கும் ஷம்மி திலகன், ரம்யா சுரேஷ் , மனோஜ் ஓமன் ,ஷினே டாம் சக்கோ ,இந்திரன்ஸ் , விஜயராகவன் என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !
கேரளத்தின் இயற்கை அழகையும் , மக்களின் வாழ்வை இயல்பாகவும் !முடிவில் பருந்து பார்வை எனப்படும் ஹெலிகாம் தொழிற் நுட்பத்தின் மூலம் கூட்டத்தின் பிரமாண்டத்தையும் காட்சிப்படுத்திய விதத்தில் பாராட்டும்படியான ஒளிப்பதிவில் தீபக் டி.மேனன்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் .. கதைக்களத்திற்கேற்றபடி பின்னணி இசை அசத்தல் !
இயல்பாக வாழும் கிராமத்து மக்களுக்கு நல்லது செய்வது போல,,,, சேவை திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தில் காலூன்ற நினைக்கும் அரசியல் கட்சி !
தன் கட்சி தொண்டர்களை வைத்து மோதல், போராட்டம், அராஜகம், வன்முறை போன்றவற்றை கையில் எடுத்து ஒரு கிராமத்தையே தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் கட்சி தலைவனை , இறுதியில் மக்களுடன் சேர்ந்து எதிர்க்கும் நாயகன் இந்த கதையினை மையமாக கொண்டு,,,
தெளிவான,,,, நேர்த்தியான,,,, அழுத்தமான,,,,, கதை , திரைக்கதை அமைப்பில் நாட்டில் அரசியல் கட்சிகள் செய்யும் அட்டூழியங்களையும் ஏமாற்று வேலைகளையும் காட்சிகளால் இயல்பாகவும் ”நம் மண், நம் வீடு, நம் நாடு” என்ற மக்களின் முழக்கத்துடன் , இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தரமான அரசியல் படமாக அனைவரும் பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் லிஜு கிருஷ்ணா.
ரேட்டிங் 4. /5