top of page

'நித்தம் ஒரு வானம்' - விமர்சனம் !

Updated: Nov 5, 2022


ஐ டி கம்பெனியில் வேலை செய்யும் அசோக் செல்வன் எதிலும் எப்பொழுதும் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டாக சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கும் மனிதர்.

சிறு வயது முதலே இவர் படிக்கும் கதை புத்தகத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் தன்னை ஒரு கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டு புத்தகத்தை படிக்கும் பழக்கம் கொண்டவர் !


இந்நேரத்தில் பெற்றோர்களின் வேண்டுகோளின்படி திருமணத்திற்கு ஒத்து கொள்ளும் அசோக் செல்வன் தனக்கு நிச்சயித்த பெண்ணை மிகவும் நேசிக்க ,,,,,,திருமணத்திற்கு முன் நாள், தான் ஏற்கனவே காதலித்த காதலனின் குணத்தினால் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி மணப்பெண் அசோக் செல்வனிடம் சொல்ல,,,,,அது பிரச்சனை அல்ல அவன் உன் மீது வைத்துள்ள அதிக பட்ச பாசம் என முந்தைய காதலனின் நல்ல குணத்தை மணப்பெண்ணுக்கு எடுத்து சொல்கிறார் அசோக் செல்வன்.தெளிவான மணப்பெண் திருமணத்திற்கு முந்தைய நாள் தான் விரும்பிய காதலனுடன் அசோக் செல்வன் முன்னிலையில் சென்றுவிடுகிறார்.


நின்று போன திருமணத்தால் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் அசோக் செல்வன் அதிலிருந்து மீண்டு வர குடும்ப டாக்டரான அபிராமி தான் எழுதிய இரண்டு சிறுகதை புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார்.


அசோக் செல்வ னும் அதனை படிக்க அந்த சிறுகதையில் நடக்கும் இருவேறு சம்பவங்களில் வரும் கதாநாயகனாக தன்னை கற்பனை செய்துக் கொள்கிறார்.


அந்த இரு காதல் கதையின் கடைசி பக்கங்கள் இல்லாமல் முடிவில் என்ன நடந்தது என தெரியாமல் கதை எழுதிய அபிராமியிடம் முடிவை கேட்கிறார் .


இது கதை அல்ல அந்த சம்பவங்கள் எல்லாம் உண்மை அவர்களை நீ தேடிச் சென்றால்தான் அதற்கான விடை கிடைக்கும் என்று அபிராமி சொல்கிறார்.அபிராமி சொன்னபடி அசோக் செல்வன் கதையில் வந்த உண்மை கதாப்பாத்திரங்களை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.


அசோக் செல்வன் நேரடியாக அவர்களை சந்தித்தாரா?


அவர் கதையில் படித்த கடைசி பக்கத்தை போல அவர்களது வாழ்க்கை நிலை இருந்ததா ?


வாழ்க்கையின் மறுபக்கத்தை அசோக் செல்வன் முடிவில் புரிந்துக் கொண்டாரா ? இல்லையா ?என்பதுதான் 'நித்தம் ஒரு வானம்' படத்தின் கதை.


சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நாயகனாக நடிக்கும் அசோக் செல்வனுக்குஅவர் நடித்த படங்களிலே மிக சிறந்த படமாக இந்த படம் அமைய போவது உறுதி !

எதார்த்தமான ரசிக்கும்படியான மூன்று விதமான கெட் அப் களில் இயல்பான நடிப்பில் அசத்தல் !நாயகிகளாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா , ரிது வர்மா கதைக்கேற்றபடி கதாபாத்திரங்களாகவே வாழ்கின்றனர் !


கவரவ வேடத்தில் நடித்துள்ள ஜீவா , காளி வெங்கட் ,சிவாதா ,அழகம் பெருமாள் ,அபிராமி என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !


விது அய்யன்னா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் குறிப்பாக பனி பொழிவு காட்சிகள் கண்களுக்கு விருந்து!


கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியான ரகம் ! கதையின் வேகத்திற்கு இணையான தரன் குமாரின் பின்னணி இசை !!


உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் படித்த கதையின் முடிவை தெரிந்து கொள்ள அந்த கதாபாத்திரங்கள் வாழும் இடங்களுக்கு நாயகன் தேடி செல்வதுதான் இப் படத்தின் கதை !அழுத்தமான தெளிவான புதுமையான கதை திரைக்கதை அமைப்பில்,,, இன்றைய நடைமுறை வாழ்க்கையின் இயல்பை சொல்லும் வசனங்களுடன் ,


அசோக் செல்வன் தேடி செல்லும் வீரா ,மீனாட்சி , மதி, பிரபா என கதையுடன் பயணிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் பதியும்படி,,, படம் பார்ப்பவர்கள் அனைவரும் பாராட்டும் சிறந்த படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரா .கார்த்திக்.


ரேட்டிங் : 4 / 5
bottom of page