top of page

'டாக்டர்' விமர்சனம்


இந்திய ராணுவத்தில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பிரியங்கா மோகனை பார்க்க ,பார்த்தவுடன் அவரது அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.


சிவகார்த்திகேயனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ,உங்களை திருமணம் செய்ய எனக்கு பிடிக்கவில்லை எனக்கு ஏற்ற ஆள் நீங்கள் இல்லை நம் திருமணம் வேண்டாம் என , மனதில் நினைத்ததை மட்டும் பேசும் சிவகார்த்திகேயனை வெறுக்கிறார் பிரியங்கா மோகன்.

இந்நேரத்தில் பிரியங்கா மோகனின் அண்ணன் மகளான ஜாரா மர்ம நபர்களால் கடத்தப்படும் செய்தி வருகிறது .

கடத்தல் செய்தி அறிந்தவுடன் பிரியங்கா மோகனின் குடும்பமே கதறி அழும் நிலையில் , அந்த குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பலிடமிருந்து உங்கள் மகளை நான் மீட்டு தருகிறேன் ஆனால் நீங்கள் அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என பிரியங்கா மோகனின் அண்ணன் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் கட்டளையிட ,

அனைவரும் சிவகார்த்திகேயன் தலைமையில் ஜாராவை கடத்திய மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர் .



சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனின் அண்ணன் மகளான ஜாராவை கண்டுபிடித்தாரா ?

பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்திய அந்த மர்ம நபர் யார்?

சிவகார்த்திகேயனை வெறுத்த பிரியங்கா மோகனின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் 'டாக்டர்'


இதுவரை பார்க்காத வேடத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் அசத்துகிறார் .


அழகான அறிமுக நாயகியாக பிரியங்கா மோகன் , வில்லனாக வினய் , இளவரசு ,சுனில் ரெட்டி ,தீபா,அர்ச்சனா,யோகிபாபு, ஜாரா ,ரெடின் கிங்ஸ்லி,அருண் அலெக்ஸ் சாண்டர் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இளைஞர்களின் கொண்டாட்டமாக அனிருத் இசையில் பாடல்களும் , மிரட்டலான பின்னணி இசையும்,

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .


கடத்தல் கதை கருவை மையமாக கொண்டு அனைத்து கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைத்து நேர்த்தியான திரைக்கதையுடன் . படம் முழுவதும் கதையுடன் சேர்ந்த காமெடியுடன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன்.





bottom of page