'பனாரஸ்' - விமர்சனம் !
Updated: Nov 6, 2022

கல்லூரியில் படிக்கும் ஜையீத் கான் நண்பர்களுடன் பந்தயம் கட்டி விளையாட்டாக செய்த ஒரு விஷயம் வினையாகி நாயகி சோனல் மோன்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால் ஜையீத் கானால் மிகுந்த அவமானத்திற்கு ஆளாகும் சோனல் தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு காசி பனாரஸில் உள்ள தன் சித்தப்பா வீட்டுக்கு சென்று அவர்களது ஆதரவில் வாழ்கிறார் .
பிரச்சனையறிந்த ஜையித் கானின் தந்தை தேவராஜ் சோனலிடம் நீ செய்த தவறுக்கு காசிக்கு சென்று மன்னிப்பு கேள்!! அவள் மன்னித்தால் தான் உனக்கு மன அமைதி கிடைக்கும் என தேவராஜ் வலியுறுத்த,,,,, அவர் சொல்படி சோனலை சந்திக்க காசிக்கு செல்கிறார் ஜையித் கான்.
அங்கு மரண புகைப்பட கலைஞர் சுஜய் சாஸ்திரி உதவியுடன் சோனலை தேடுகிறார். இருவரும் சேர்ந்து சோனல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர் .
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க நினைக்கும் ஜையித் கானை சோனல் முதலில் மன்னிக்க மறுத்து பின் மன்னிப்பு காதலாக மாறி இருவரும் மனதார காதலிக்கின்றனர் .
இந்நேரத்தில் ஜையித் கான் ஒரு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார் ,
முடிவில் டைம் லூப்பிற்குள் இருந்து ஜையித் கான் வெளியே வந்தாரா ?
ஜையித் கான் டைம் லூப்பில் மாட்டிக்கொள்ள காரணமானவர்கள் யார் ?
என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் "பனாரஸ்'
நாயகனாக நடித்துள்ள ஜையித் கான் அறிமுக நடிகரை போல இல்லாமல் இயல்பான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் .. சண்டைக்காட்சிகளில் ஜையித் கான் ஆக்ரோஷமான ஹீரோவாக ஆக்க்ஷனில் அசத்துகிறார்
நாயகியாக நடித்திருக்கும் சோனல் மோன்டோரியோ இளமையும் அமைதியான அழகில் கதைக்கேற்றபடி நடிப்பில் ஜொலிக்கிறார் .
இவரது அழகில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் இலக்கண பாடல்!!
காசி பனாரஸில் வரும் ஜையித் கான் நண்பராக கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஜய் சாஸ்திரி ...இறந்தவர்களை புகைப்படம் எடுப்பதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் அனைவரையும் கண்கலங்க வைக்கிறார்.
ஜையித் கான் அப்பாவாக தேவராஜ், சோனல் சித்தப்பாவாக அச்யுத் குமார், சித்தியாக ஸ்வப்னா ராஜ் என நடிப்பில் இவர்களது பங்களிப்பு சிறப்பு ! .
அஜனீஷ் லோக்நாத் இசையில் மெலோடி கலந்த பாடல்கள் ரசிக்கும் ரகம். கதைக்கு ஏற்றபடி பின்னணி இசை அசத்தல் !
அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவில் காசியையும் ,,,,, கங்கை மற்றும் கங்கைக்கரைக் காட்சிகள் அனைத்தும் கலர்புல் !!
கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்துள்ளது "பனாரஸ்' திரைப்படம் .
காதலையும் அறிவியலையும் கலந்து டைம்லூப் ,,,, டைம் ட்ராவல் என ரசிக்க வைக்கும் காட்சிகளுடன் சொல்ல வந்த கதையை நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் அனைவரும் பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் ஜெயதீர்த்தா.
ரேட்டிங் : 3.5 / 5