top of page

'யசோதா' - விமர்சனம் !


நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமந்தா,,, தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு தேவைப்படும் பணத்திற்காக குழந்தை இல்லாத பணக்கார தம்பதிகளுக்கு வாடகைத் தாயாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

கர்ப்பிணி பெண்களுக்கான உயர்தர சிகிச்சை அளிக்கும் வரலட்சுமி சரத்குமார் நடத்தும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தொழிலதிபர் ஒருவர் பிரபலமான மாடலிங் பெண்ணை தனது எஸ்டேட்க்கு அழைத்து செல்லும் வழியில்,,,, அவர்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளாகி இருவரும் இறக்கின்றனர் .

விசாரணையில் அது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என போலீஸ் கண்டுபிடிக்க,,,,,, உயர் அதிகாரி முரளி சர்மா உத்தரவுபடி போலீஸ் அதிகாரி சத்ரு, சம்பத் ராஜ் உதவியுடன் சக அதிகாரிகளுடன் கொலையாளிகளை தேடுகிறார் !


இந் நேரத்தில் சமந்தாவை போல வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பல பேர் வரலட்சுமி சரத்குமார் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.


இந்நிலையில் சமந்தாவிடம் பழகும் நிறை மாத கர்ப்பிணியான பிரியங்கா சர்மா குழந்தை பெற்றுக் கொள்ள சிகிச்சை அளிக்கும்போது அவரது குழந்தை வயிற்றுக்குள் இறந்து விட்டது என அனைவரது முன்னிலையில் சமந்தாவிடம் வரலட்சுமி சரத்குமார் சொல்கிறார் ..

வரலட்சுமி சரத்குமார் சொல்வதை கேட்டு சந்தேகப்படும் சமந்தா,,, யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையின் தடை செய்யப்பட்ட இடமான ரகசிய அறைக்கு செல்ல அங்கு பிரியங்கா சர்மா உட்பட பல கர்ப்பிணி பெண்கள் பிணமாக இறந்து கிடக்க ,,,, இறந்து போன குழந்தை சிசுக்கள் பதப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து

அதிர்ந்து போகிறார் !!



கர்ப்பிணி பெண்களுக்கான உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை வரலட்சுமி சரத்குமார் நடத்துவதற்கான நோக்கம் என்ன ?

போலீஸ் அதிகாரி சத்ரு, சம்பத் ராஜ் உதவியுடன் சக அதிகாரிகளுடன் தேடிய கொலையாளிகள் கிடைத்தார்களா ?

மருத்துவமனையில் இறந்து போன குழந்தை சிசுக்கள் பதப்பட்ட நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன?

முடிவில் மருத்துவமனையில் நடக்கும் மர்மங்களின் பின்னணியில் உள்ள மர்ம நபர்களை சமந்தா கண்டுபிடித்தாரா ? இல்லையா ?என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'யசோதா'


கதையின் நாயகி யசோதாவாக சமந்தா ,,, தங்கை மீது பாசம் கொண்டவராக , ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகியாக ,,, உடல் மொழியில் கர்ப்பிணி பெண்ணாக,,,,,படம் முழுவதும் சிறப்பான நடிப்பில் ஜொலிக்கிறார் !


சமந்தாவிற்கு இணையான கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக வரலட்சுமி சரத்குமார் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !


டாக்டராக வரும் உன்னி முகுந்தன் , ராவ் ரமேஷ் ,சம்பத் ராஜ் , சத்ரு , முரளி சர்மா , மதுரிமா ,காவ்யா ,கல்பிகா கணேஷ் ,திவ்யா ஸ்ரீபதா,பிரியங்கா சர்மா என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !!


மணி சர்மா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் !! கதையின் வேகத்திற்கு இணையான பின்னணி இசையில் மிரட்டல் !


சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் !



வாடகை தாய் கர்ப்பிணி பெண்களின் கதையை மையமாக வைத்து ,,,தெளிவான வேகமான திரைக்கதை அமைப்பில் ,, க்ளைமாக்சில் யாரும் யூகிக்க முடியாத திருப்பு முனையாக சமந்தா கதாபாத்திரத்தை வடிவமைத்துடன் ,,,, அனைவரும் ரசிக்கும் விதமாக க்ரைம் த்ரில்லர் கலந்த அதிரடி ஆக்க்ஷன் படமாக இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ஹரி ஹரிஷ்.


ரேட்டிங் : 4 / 5



bottom of page