top of page

'மிரள்' - விமர்சனம் !


இரவு நேரத்தில் காரில் குடும்பத்துடன் பயணிக்கும் பரத்தை ஒரு மர்ம மனிதன் கொல்வது போல கனவு காண்கிறார் பரத்தின் மனைவியான வாணி போஜன்.


இந்த திகில் கனவால் மன அழுத்தத்தால் வாணி போஜன் இருக்கும் நேரத்தில்,, கட்டு மான தொழிலில் என்ஜினீயராக இருக்கும் பரத் ஒரு விபத்தில் உயிர் தப்பிக்கிறார்.


காதல் திருமணம் செய்து கொண்ட இருவரது ஜாதகத்தை வைத்து பார்க்கும் வாணி போஜனின் அம்மாவான மீரா கிருஷ்ணனிடம்,,,,,, இருவருக்கும் நேரம் சரியில்லை குல தெய்வத்திற்கு கடா வெட்டி சாமி கும்பிட எல்லாம் சரியாகும் என ஜோசியர் சொல்கிறார் .


ஜோசியர் சொல்படி பரத்தும்,, வாணி போஜனும் குல தெய்வத்தை வழி பட குடும்பத்துடன் ஊருக்கு செல்கின்றனர் .


குல தெய்வத்தை வழி பட்ட பின் அங்கிருந்து திடீர் வேலையாக இரவு நேரத்தில் மகன் மற்றும் வாணி போஜனுடன் பரத் ,,,ஊருக்கு கிளம்புகிறார்.


ஊருக்கு செல்லும் வழியில் முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் பயமுறுத்தி,,,,,பரத்தை அடித்து விட்டு மனைவி வாணி போஜன் மற்றும் மகனை காரில் கடத்தி செல்கிறான்.


மயக்கம் தெளிந்த பரத் தன் மகனையும் மனைவியையும் தேடுகிறார் . அந்த நேரத்தில் இறந்து போன இருவர் பேயாக வந்து மிரட்டுகின்றனர் .


முடிவில் மனைவி வாணி போஜன் மற்றும் மகனை பரத் காப்பாற்றினாரா?


முகமூடி அணிந்த மர்ம மனிதனும் ,,, இரண்டு பேய்களும் பரத் குடும்பத்தை கொல்ல முயற்சிப்பதற்கான காரணம் என்ன ?


முகமூடி அணிந்த மர்ம மனிதன் யார் ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் 'மிரள்'


கதையின் நாயகனாக பரத் உணர்ச்சிமயமான காட்சிகளில் குறிப்பாக இரவு நேரத்தில் நடக்கும் திகில் சம்பவங்களில் இயல்பான நடிப்பில் மிளிர்கிறார் !


கதையின் நாயகியாக வாணி போஜன் கதைக்கேற்றபடி நடிப்பில் எதார்த்தம் !


முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ,கே.எஸ்.ரவிக்குமார் ,மீரா கிருஷ்ணன் , காவ்யா ,பாக்யா , ஜீவா சுப்ரமணியன் ,அர்ஜெய் என நடிப்பில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


எஸ்.என் .பிரசாத்தின் இசையும்,,,, சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும்....படத்திற்கு பக்க பலம் !

சொல்ல வந்த கதையை வேகமான திரைக்கதை அமைப்பில்,,, மிரட்டலான இரவுநேரத்தில் வெட்ட வெளியில் பரத் குடும்பம் சந்திக்கும் திகில் சம்பவத்தை கதையாக கொண்டு ,,, விறு விறுப்பான,,,, படம் பார்ப்பவர்கள் எதிர்பார்க்காத,,, எளிதில் யூகிக்க முடியாத திருப்புமுனை காட்சியான க்ளைமாஸ்க்குடன்,,,புதுமையான கதை களத்தில் இப் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எம் .சக்திவேல் .


ரேட்டிங் : 3.5 / 5

bottom of page