top of page

‘பரோல்’ - விமர்சனம் !


வடசென்னையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜானகி சுரேஷ் சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிங்கா, கார்த்திக் என இரண்டு மகன்களை தனி ஆளாய் வளர்த்து வருகிறார் .


மூத்தவன் லிங்கா சிறுவயதில் தனது அம்மாவை கேவலமாக பேசிய ஒருவரை கல்லால் அடித்து கொன்றதால் ஜெயிலுக்கு செல்கிறார்.


பிளம்பிங் வேலைகள் செய்து பிழைப்பை நடத்தும் இளையவன் கார்த்திக் அம்மாவை பார்த்துக்கொள்கிறார்.


லிங்கா, ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் பணத்திற்காக கொலை செய்ய ஆரம்பிக்கிறார்.


ஆனால் தனிப்பட்ட விரோதத்திற்காக லிங்கா இரண்டு கொலைகளை செய்வதால்

லிங்காவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு செல்கிறார்.



தன் மகனை எப்படியாவது சிறையில் வெளியே எடுக்க போராடுகிறார் ஜானகி சுரேஷ்.


இந்நிலையில் கொலை செய்த லிங்காவை வெளியே எடுக்க முயற்சி செய்யும் ஜானகி சுரேஷ் மீது கோபம் அடையும் கார்த்திக் லிங்கா வெளியே வராதபடி இருக்க சதி செய்கிறான் .


தன் மகனை வெளியே எடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும்ஜானகி சுரேஷ் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.


அம்மாவின் இறுதிச் சடங்கு செய்வதற்காக கார்த்திக்,,,,, லிங்காவை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார் கார்த்திக் .ஆனால் அதில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.


முடிவில் கார்த்திக் லிங்காவை பரோலில் வெளியே கொண்டு வந்தாரா? கார்த்திக் எதிர்பார்த்ததுபோல அம்மாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றதா ? இல்லையா? என்பதுதான் ‘பரோல்’ படத்தின் கதை.


வட சென்னையில் வாழும் ரவுடிகளாக ஆர் எஸ் கார்த்திக் , லிங்கா இருவருமே இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் .


நாயகிகளாக நடித்துள்ள கல்பிக்கா மற்றும் மோனிஷா முரளி கதைக்கேற்றபடி நடிப்பில் எதார்த்தம் !



அம்மாவாக நடிக்கும் ஜானகி சுரேஷ் ,வக்கீலாக நடித்துள்ள வினோதினி, மேக் மணி ,ஷிவம் ,டென்னிஸ் , இம்மானுவேல் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் இயல்பு !


கதைக்கு பக்க பலமாக மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவும் . ராஜ்குமார் அமலின் பின்னணி இசையும் !


ஜெயிலில் இருக்கும் குற்றவாளி பரோலில் வெளியே வர போராடும் கதைக்களத்துடன்,,, வடசென்னையில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்வியலை காட்சிகளில் இயல்பாக காட்டியதுடன் அண்ணன் ,,தம்பி கதைகளிலே இதுவரை வராத புது விதமாக,,, வித்தியாசமான கதையுடன் புதுமையான,,, தெளிவான திரைக்கதை அமைப்பில்,, பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் இயக்குனர் துவாரக் ராஜா .


ரேட்டிங் : 3. 5 / 5

bottom of page