top of page

' பேட்டைக்காளி ’ ஆஹா ஓடிடி இணையத் தொடர் - விமர்சனம்!


ஊரில் நடக்கும் ஜல்லி கட்டு போட்டியில்ஊரில் பெரிய மனிதராக இருக்கும் பண்ணையாரான வேலராம மூர்த்தி வளர்க்கும் ,,,,, காளையை யாராலும் அடக்கமுடியாது.


இதனால், ஜல்லிக்கட்டு போட்டியில் அவரது காளைக்கு தனிமரியாதை கிடைக்கிறது.


இந்நேரத்தில் எந்த காளையாக இருந்தாலும்சாமர்த்தியமாக அடக்ககூடிய தைரியமான மாடுபிடி வீரரான கலையரசனையும் அவரது ஊரை சேர்ந்தவர்களையும் வேலராமமூர்த்தியின் காளையை அடக்க கூடாது, என்று தண்டோரா போட்டு ஊர் கட்டுப்பாடு விதிக்கிறது.


போட்டி நேரத்தில் கட்டுப்பாட்டைமீறி கலையரசன், வேலராமமூர்த்தியின் காளையை அடக்கி விடுகிறார். கலையரசன்காளையை அடக்கியதால் வேலராமமூர்த்தி கலையரசன் மீது பயங்கரமான கோபத்தில்இருக்கிறார் .


இதற்கிடையில் வேலராமமூர்த்தி மகனான பாலா ஹாசன்ரா வேல ராமமூர்த்திக்கு என்னென்ன மரியாதை கிடைக்கிறதோ அதேபோல தனக்கும் மரியாதை கிடைத்து ஊர்மக்கள் முன்னிலையில் பண்ணையாளராக வலம் வர வேண்டும்என நினைக்க,,,,,அதனை கடுமையாக எதிர்க்கிறார் வேலராமமூர்த்தி !


இந்நிலையில் கலையரசன் காளையை அடக்கிய பிரச்சனையில்ஊர் மக்கள் கூட்டிய பஞ்சாயத்தில் கலையரசனை வேலராமமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றனர் !


வேலராமமூர்த்தியிடம்மன்னிப்பு கேட்க செல்லும் கலையரசனை வேலராமமூர்த்தியின்ஆட்கள் அடித்து வம்பு செய்ய,,,,, அதிலிருந்து தப்பிக்கும் கலையரசன் சில நாட்களுக்கு பின் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார் !

கலையரசனின்கொலையால் பழி வாங்க துடிக்கும் கலையரசனின் மாமா கிஷோர் வேலராமமூர்த்தி செல்லும் கார் மீது நாட்டுவெடிகுண்டு வீசி அவரது ஆட்களை வெட்டி சாய்க்கிறார் !


கலையரசனை கொலை செய்த மர்ம நபர் யார் ?


பாலா ஹாசன் ரா,,,,,, நினைத்தபடி தந்தையை போல ஊர்மக்களிடம் மரியாதையாக வாழ்ந்தாரா ?


நாட்டுவெடிகுண்டு வீசி கொல்லதுடித்த கிஷோரிடமிருந்து வேலராமமூர்த்தி தப்பித்தாரா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில்சொல்லும் இணைய தொடர்தான் 'பேட்டை காளி'


முதல் பாகம் சாதிபிரச்சனையை மையமாக வைத்து தொடர , இரண்டாம் பாகம் ஜல்லிக்கட்டு போட்டியில் இருக்கும் அரசியலை மையமாக வைத்து தொடர்கிறது .


மூன்றாம் பாகம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி மற்றும் சூழ்ச்சியை மையப்படுத்த,,,,,, தொடரும் நான்காம் பாகத்தில் ‘பேட்டைக்காளி’ யார்? என்ற உண்மை தெரிய வர ,,,,,ஆர்வத்தை தூண்டும் வகையில் அடுத்தடுத்த பாகங்களை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிறது.


மாடுபிடிவீரராக நடித்துள்ளகலையரசன் உண்மையான மாடுபிடி வீரராக படம் முழுவதும் கதாபாத்திரமாகவே வாழ்கிறார் .


வழக்கமான நடிப்பில் ஊர் பண்ணையாராக வரும் வேல ராமமூர்த்தி, அழுத்தமான கதாபாத்திரத்தில் கலையரசனின் மாமாவாக நடித்திருக்கும் கிஷோர்,


பாலா ஹாசன் ரா,ஷீலாராஜ்குமார்,சதீஸ்வரன்,ஒன்றியம் பிரபு,லவ்லின் சந்திரசேகர்,கௌதம்,தென்றல் ரகுநாதன்,பட்டாபி என அனைவரதுபங்களிப்பும் நடிப்பில் சிறப்பு .


படத்திற்குபக்க பலமான சந்தோஷ் நாராயணனின்இசை !


திரைக்கதையின்வேகத்திற்கு இணையான வேல்ராஜின் ஒளிப்பதிவு !


ஜல்லிக்கட்டுபோட்டி,,,,தங்களது காளையைகொண்டு போட்டியை நடத்தும்அதிகார வர்க்கத்தினர் நடத்தும் அரசியல் ,,,,மாடு பிடி வீரர்களின்துணிச்சலான சாகசகங்கள் ,,,கதாபாத்திரங்களாகவே மாறி கதைக்களத்துடன் இணைந்து பயணிக்கும் நடிக -நடிகையர் என நான்குபாகங்களையும் ரசிக்க வைக்கும் கதையுடன் தெளிவான நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் அடுத்து வரும் பாகங்களையும் பார்க்க ஆவலுடன்

எதிர்பார்க்கும்படி தரமான தொடராக ' பேட்டை காளி' இணைய தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் லா.ராஜ்குமார்.


ரேட்டிங் : 3. 5 / 5

bottom of page