top of page

'கலகத் தலைவன்' - விமர்சனம் !


வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் வேலை பார்த்து வருகிறார்.

இந்நேரத்தில் புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தையில்வஜ்ரா நிறுவனம் அறிமுகபடுத்துகிறது,

சந்தையில் அறிமுகமாகும் அந்த வாகனத்தில் அதிகமாக புகையை கக்கும் தொழிற் நுட்ப குறை இருப்பதால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருக்க மேலிடத்தால் முயற்சிகள் நடக்கிறது.


இந்நிலையில் மற்றொரு நிறுவனத்திற்கு,,,, அறிமுகமாகிய அந்த வாகனத்திற்கு அதிகமாக புகையை கக்கும் தொழிற் நுட்ப குறை தெரிவதால் உலகம் முழுவதும் செய்திகளால் அமபலப்படுத்துகிறது .


இதனால் அதிர்ச்சியடையும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ,,,, வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க முன்னாள் ராணுவ வீரரான ஆரவ் தலைமையிலான குழுவை நியமிக்கிறார் .


சந்தேகப்படும் நபர்களை கடுமையான முறையில் விசாரித்து திடுக்கிடும் தகவல்களை வாங்குகிறார் ராணுவ வீரரான ஆரவ்!


முடிவில் நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிட்ட மர்ம நபர்களை ஆரவ் கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதுதான் 'கலகத் தலைவன்' படத்தின் கதை !


படத்தின் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் 'திரு' என்கிற பொருளாதார நிபுணர் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான அழுத்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்கிறார் !


படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் கவனிக்க வைக்கும் கலையரசன்!


அழகான ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டும் ஆரவ் அமைதியான நடிப்பில் மிளிர்கிறார் !


நாயகியாக வரும் நிதி அகர்வால் கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு !


அனுபமா குமார் ,அங்கனா ராய் , ஆர் ஜே விக்னேஷ் ,ஜீவா ரவி என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு !


அரோல் கொரோலி பாடல்கள் கேட்கும் ரகம் ! மிரட்டலான பின்னணி இசையில் ஶ்ரீகாந்த் தேவா!

தில்ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்திற்கு இணையான தில்ராஜின் ஒளிப்பதிவு!


சந்தையில் மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை,,,, நடைமுறை அரசியலில் நடக்கும் தனியார் மயம்,,,, பொருளாதார சிக்கலில் வேலையிழந்த மக்களின் நிலைமை என தெளிவான வேகமான திரைக்கதை அமைப்புடன்,,, நாட்டில் நடைபெறும் அவலங்களை துணிவுடன்,,,,, சீட்டின் நுனியில் ரசிகர்கள் உட்காருமளவில் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் காட்சிகளை விறு விறுப்பாகவும்,,, முடிவில் நாயகனுக்கும் ,,, வில்லனுக்கும் நடக்க போகும் ஆக்க்ஷன் காட்சிகளை படம் பார்க்கும் ரசிகர்கள் எதிர்பார்க்காத புதுமையான க்ளைமாஸ்க்குடன் ரசிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லரை இயக்கியுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி.


ரேட்டிங் : 3.5 / 5



bottom of page