' பட்டத்து அரசன் ' - விமர்சனம் !

இளமை பருவத்தில் கபடி விளையாட்டில் சிறந்த வீரராய் திகழ்ந்த ராஜ்கிரண்! தனக்கு கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை உதறிவிட்டு தான் வாழும் ஊருக்காக கபடி விளையாடி வெற்றி பெறுகிறார் .
ஊர் மக்கள் சிலை வைத்து வழிபாடு செய்யும் அளவிற்கு மரியாதைமிக்க மனிதராக வயதான பின் தனது மகன்கள் மற்றும் பேர பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் ராஜ்கிரண் !
அதர்வா சிறுவனாக இருக்கும் கால கட்டத்தில் ராஜ்கிரண் சொல்லை கேட்டு கபடி விளையாட போன அவரது மகன் ஆர் கே சுரேஷ் கபடி விளையாடும் போது மரணம் அடைய,,,, தன் கணவரின் சாவுக்கு ராஜ்கிரண் தான் காரணம் என ராஜ்கிரண் குடும்பத்தை விட்டு பிரிந்து தன் மகன் அதர்வாவுடன் தனியாக வாழ்கிறார் ராதிகா.
இந்நிலையில் ராதிகாவின் பேச்சை கேட்காமல் எப்படியாவது குடும்பத்தை ஒன்று சேர்க்க அதர்வா போராடி வருகிறார்.
இதற்கிடையில் கபடியில் சிறப்பாக விளையாடும் ஜெயப்பிரகாஷின் மகனான ராஜ் ஐயப்பனை மாவட்ட அளவில் விளையாட மேலிடம் அழைக்கிறது .
குடும்ப சூழ்நிலை கருதி யாருக்கும் தெரியாமல் நண்பன் சத்ருவின் மூலமாக பயிற்சிக்காக பணம் வாங்குகிறார் ராஜ் ஐயப்பன் .
இந்நேரத்தில் ஊரில் நடக்கும் கபடி போட்டியில் ராஜ் ஐயப்பன் கலந்து கொள்ளாமல் போக ,,,, ஊரின் சார்பில் விளையாடும் அணி தோற்று போகிறது .
மேலும் மாவட்ட அளவில் ராஜ் ஐயப்பன் விளையாட முடியாமல் சத்ரு சதி செய்ய மனமுடைந்த ராஜ் ஐயப்பன் தற்கொலை செய்து கொள்கிறார்.
ராஜ் ஐயப்பனால்தான் தங்கள் அணி தோற்று போனது என கோபமடைந்த ஊர் மக்கள் பஞ்சாயத்தை கூட்டி ராஜ்கிரண் குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறனர்.

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என கிராம பஞ்சாயத்தில் அதர்வா போராடியும் முடியாமல் போக , ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தில் இருப்பவர்களை வைத்து ஒரு கபடி குழுவாக ஒருங்கிணைத்து ஊரின் சார்பில் நடக்கும் போட்டியில் குடும்ப அணியாக நாங்கள் போட்டியிடுகிறோம் என பஞ்சாயத்தில் முறையிடுகிறார் .
இந்த கபடி போட்டியில் எங்கள் குடும்ப கபடி குழு அணியை எதிர்த்து
ஊர் மக்களின் சார்பில் போட்டியிடும் அணி வென்றால் நாங்கள் செய்தது தவறு,,,,,,
ஒரு வேளை ஊர் மக்களின் சார்பில் போட்டியிடும் அணி எங்களிடம் தோல்வி அடைந்தால் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என அதர்வா சொல்ல ஊர் பஞ்சாயத்தும் ஒப்பு கொள்கிறது .
முடிவில் ஊரை எதிர்த்து போட்டியில் கலந்து கொண்ட ராஜ் கிரண் குடும்ப கபடி குழு வெற்றி பெற்றதா ?
ராஜ் கிரண் குடும்பத்துடன் ராதிகா தன் மகன் அதர்வாவுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'பட்டத்து அரசன்'
நாயகனாக அதர்வா அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாக அனல் பறக்கும் சண்டை காட்சிகளிலும்,,,,, குடும்ப பாசம் கொண்ட உணர்ச்சிமயமான காட்சிகளிலும் ,,,,, எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் !
நாயகியாக அழகான ஆஷிகா ரங்கநாத் கதைக்கேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் !

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் பாசம் கொண்ட குடும்ப தலைவனாகவும் , கபடி வீரராகவும் அமைதியான நடிப்பால் அனுபவ நடிகராக அனைவரையும் கவர்கிறார் !
ராதிகா சரத்குமார் , ஜெயபிரகாஷ், சத்ரு ,துரை சுதாகர் , சிங்கம் புலி ,ஆர் கே சுரேஷ் , ரவி காலே , பால சரவணன் ,ஜி எம் குமார் என அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சூப்பர் !! பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் !
கபடி விளையாட்டின் வேகத்திற்கு இணையான லோகநாதன் ஸ்ரீனிவாசனின் தரமான ஒளிப்பதிவு !
ரசிக்கும்படியான கதை, திரைக்கதை அமைப்புடன், ஜீவனுள்ள வசனங்களுடன் ,,, கதையுடன் சேர்ந்து கபடி விளையாட்டு பயணிக்கும்படி,,, குடும்ப பாச உறவு முறை கலந்த அதிரடி ஆக்க்ஷன் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சற்குணம்.
ரேட்டிங் : 4. / 5